முடக்கிபோடுகின்ற பயம்

Posted on

அன்பார்ந்த திரு. சினா,

நான் அரண்டுபோய் இருக்கிறேன். எதை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. நரகத்தை பற்றிய இஸ்லாமிய சித்தரிப்பினால்  நான் அரண்டுபோய் இருக்கிறேன். என் குடும்பத்தினரை போல நான் எனக்காக இவ்வளவு பயப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். என்னுடைய காலம் சென்ற பாட்டனார் அங்கு இருந்தால் என்னாவது?  மேலும் எனக்கு  பல நாத்திக மற்றும் சில ஹிந்து நண்பர்கள் உள்ளனர்.  தயவு செய்து எனக்கு உதவுங்கள். எதை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. மரணத்தை பற்றி இப்படிப்பட்ட சாந்தமான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். ஆனால் இந்த “நரகங்கள்” எல்லாம் என்னை அரள வைக்கின்றன. இப்பொழுது மரணத்தை பற்றி நான் அச்சம் உள்ளவனாக இருக்கிறேன்.

உண்மையுடன்,

ஓ. ஹெச். ட்டி. (O .H .T.)
அன்பார்ந்த ஓ. ஹெச். ட்டி. (O .H .T.),

ஒரு சின்ன பகுத்தறிவு சிந்தனை உதவி புரியும். கடவுள் இருக்கிறார் என்று நாம் அனுமானிப்போம். அவர் புத்தி சுவாதீனமில்லாத, துன்புறுத்தி இன்பம் காணும் கடவுளாக இருப்பாரா அல்லது அன்பான, ஞானமிக்க, கனிவான கடவுளாக இருப்பாரா? தெளிவாகவே, வன்முறையை நாடும் மனநோயாளியாக(Psychopath) கடவுள் இருக்க முடியாது. நம்பிக்கையின்மையை விட்டு விடுவோம், எந்த காரணத்துக்காகவாவது அன்பான கடவுள் மனிதர்களை நரகத்துக்கு அனுப்பி அவர்களை கொடுமையாக வேதனை செய்யக்கூடுமா? யாராவது ஒருவர் உங்களுக்கு நன்றியற்றவராக இருந்தால் இப்படிப்பட்டதை நீங்கள் செய்வீர்களா? நீங்கள் யாரையாவது  அவர் உங்களிடம் முரட்டுத்தனமாக இருந்து உங்களை அவமதித்தாலும் எரிப்பீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் புத்தி சுவாதீனமற்றவர் இல்லை. இப்பொழுது எப்படி கடவுளால் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்? அது புத்தி சுவாதீனமின்மை ஆகாதா?

பிரபஞ்சத்தின் அளவை பற்றி சிந்தித்து பாருங்கள். அதில் நம்முடைய பால்வழி மண்டலம்(Milky Way) என்ற நட்சத்திர கூட்டம் (Galaxy) சுத்தமாக முக்கியத்துவமே இல்லாதது. பிறகு இந்த விண்மீன் கூட்டத்துக்குள் உள்ள  நம்முடைய சூரியக் குடும்பம்(Solar system) கண்ணுக்கு புலப்படாத ஒரு துரும்புவே. பிறகு பூமி இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்முடைய முக்கியத்துவம் என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை! இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தை உண்டாக்கியவர் மனிதர்களாகிய நாம் அவரை வணங்கவில்லை என்றால் மனம் புண்பட்டுவிடுவாரா? இப்படிப்பட்டதை சொல்வது சுத்த முட்டாள்தனமாகும். தயவு செய்து இந்த காணொளியை(Video) பாருங்கள் :

http://www.youtube.com/watch?v=17jymDn0W6U&feature=player_embedded

எனவே பிரபஞ்சத்தின் அளவு தான் என்ன? பூமியின் ஒவ்வொரு திசையிலிருந்தும் 46 பில்லியன் (1 பில்லியன் என்பது 100  கோடி) ஒளி வருடங்கள் (ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வேகத்தில் பயணிக்கும். 1 ஒளி வருடம் என்பது  நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வேகத்தில் ஒரு வருட காலம் பயணிக்கும் தூரத்தை குறிக்கிறது) தொலைவிலுள்ள விண்மீன் கூட்டங்களை ஹப்புள் விண் தொலைநோக்கி கண்டுபிடித்திருக்கிறது. இது பார்க்கமுடிந்த  (Observable) பிரபஞ்சத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு இடையே உள்ள 92  பில்லியன் ஒளி வருடங்கள் கொண்ட விரிவு. 13 .7  பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்புதான் பெரு வெடிப்பு(Big Bang) நிகழ்ந்தது, எந்த ஒரு பொருளும்(Matter) ஒளியை விட வேகமாக பயணிக்க முடியாது என்பதால், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். விண்வெளி விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே விடை. பெருவெடிப்புக்கு பிறகு உடனே அது விண்ணியல் விகிதாசார அளவுகளில்(Astronomical proportions) விரிவடைந்தது. ஆனால் அதுவே எல்லாம் இல்லை. 92  பில்லியன் ஒளிவருடங்கள் அகலமுள்ள பார்க்கமுடிந்த பிரபஞ்சம் என்பது முழு பிரபஞ்சம் அல்ல. முழுமையான பிரபஞ்சம் மிக, மிக பெரியது. எவ்வளவு மிகப் பெரியது?  முன்பே1980 களில், பொருள் மற்றும் எதிர் பொருள்(Matter and Anti matter) என்ற எதிரெதிர் மின்பொதி (Opposite charge) கொண்ட தனிமங்களின் வடிவில் விண்வெளியின் வெற்றிடத்திலிருந்து ஆற்றல் தொடர்ந்து உதித்துக்கொண்டு இருக்கிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையிலான புதிய கோட்பாட்டின்படி, எல்லையற்றதனமான குறுகிய நேரத்தில்(Infinitesimally short time) வெளியையும் காலத்தையும் (Space and Time) பெருக்கமடைய செய்து, அணு அளவிலிருந்து பேரண்ட அளவுக்கு போகச்செய்து,     விண்வெளியின் வெற்றிடத்தில் ஊன்றியுள்ள ஆற்றல் தளமானது (Energy field) திடீரென்று உயர் ஆற்றல் நிலைக்கு உயர்ந்தது என்று இயற்பியலார் ஆல்லன் கூப்(Allan Goof) கருத்தை முன்மொழிந்தார். விளைவாக, சில கணக்கீட்டின்படி, பார்க்கமுடிந்த பிரபஞ்சத்தின் அளவைவிட சுமார் 10,000,000,000,000,000,000,000,000  மடங்கு அதிகமான அளவுக்கு முழு பிரபஞ்சம் வளர்ந்திருக்கும். அதாவது, 10 க்கு பின்னாடி 24  சைபர்கள். இன்னொரு வழியில் குறிப்பிடுவதென்றால், ஒரு அணுவுக்கு பார்க்கமுடிந்த முடிந்த பிரபஞ்சம் எப்படியோ   அப்படியே  பார்க்கமுடிந்த பிரபஞ்சத்துக்கு முழுமையான பிரபஞ்சமும் இருக்கிறது.

உங்களுக்கு மயக்கம் வரவில்லையே? ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை. இந்த நம்ப முடியாத பிரமாண்ட பிரபஞ்சம் ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது என்பது இல்லாமல் இருக்கலாம். நமது பிரபஞ்சத்துக்கு இணையான மற்ற எல்லையற்ற(Infinite) பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும். எல்லையற்ற! அது பெரியது.

இப்பொழுது, இவைகள் எல்லாம் கடவுளால் படைக்கப்படுகிறது என்று அனுமானித்துக் கொள்ளுங்கள். இந்த கடவுள் அவரை நம்பாததற்காக உங்களை கொடூரமாக வேதனை செய்வதைப் பற்றி லட்சியம் செய்வாரா? வாருங்கள்! நம்முடைய மூளையை பயன்படுத்தி, ஏழாம் நூற்றாண்டை சார்ந்த கிறுக்குத்தனமான, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த மூடரின் பொய்களை நம்புவதை நிறுத்திக்கொள்ள இதுவே சரியான நேரமில்லையா? முஹம்மது சொன்ன எல்லாமே தவறு என்று நிரூபிக்கப் பட்டுள்ளன. அந்த மனிதர் ஒரு மூடர். காணக்கூடிய உலகத்தை பற்றிய அவரது அறிவு தவறானது என்று நிரூபிக்கப் படும்போது, பார்க்காத உலகத்தை பற்றிய அவரது வர்ணனை சரியானது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

நரகத்தில் மனிதர்கள் எரிந்து கொண்டிருப்பதை முஹம்மது பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவர்கள் காலையில் எழுந்து தொழுகை புரிவதற்கு பதிலாக தூங்கிய மனிதர்கள். அவர்களில் ஒருவர் தொழுகையின்போது காற்று பிரித்தார். அவருடைய தொழுகை கூடவில்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் அவரை என்றென்றைக்குமாக எரித்துக்கொண்டு இருக்கிறார். எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்கு செல்வார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஏற்கெனவே அதில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அறியாமையும் மடத்தனமும் நரகத்தைபோல் அல்லவா? வன்முறையை நாடும் மனநோயாளியை(Psychopath) பின்பற்றுவதற்கு 1.5 பில்லியன் புத்தி சுவாதீனமுள்ள மக்கள் தங்களுடைய பகுத்தறிவு சிந்தனையை விட்டுவிட்டார்கள். இது நரகம் இல்லையா?

உங்கள் புறக்கடையில்(Backyard) ஒரு எறும்பு புற்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவைகள் உங்களுடைய சொத்திலிருந்து உண்டு வாழ்கின்றன. அதற்காக அவைகள் உங்களுக்கு நன்றி செலுத்துகின்றனவா, இல்லையா என்று நீங்கள் அக்கறைபடுவீர்களா? நீங்கள் அக்கறைபட்டால், நீங்கள் ஒரு மறைகழண்ட ஆள். உங்களுக்கும் எறும்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தைவிட எல்லையற்ற அளவு(Infinitely) குறைவானது. எனவே எறும்புகள் உங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது கேலி செய்யத்தக்கது என்று நீங்கள் கண்டீர்களானால், நாம் அவருக்கு நன்றி செலுத்தவில்லை என்றால் கடவுள் மனம் புண்படுவார் என்று நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்?

வன்முறையை நாடும் மனநோயாளியாகவுள்ள  தன்னைமட்டுமே உயர்வாக நினைப்பவர்கள்(Psychopath narcissists) மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு பயத்தை பயன்படுத்துவார்கள். முஹம்மது வன்முறையை நாடும் மனநோயாளியாக(Psychopath) இருந்தார். பயம்தான் அவருடைய கட்டுபடுத்தும் கருவியாக இருந்தது. அவருடைய காலத்து அறியாமையுள்ள மக்களை பயத்தின் மூலம் அவர் முட்டாளாக்கி அவர்களை அவர் திறமையாக  கையாண்டார். புத்திசாலிகளான, கல்வி பெற்ற மனிதர்கள் அவரை பார்த்து சிரித்து அவருக்கு பித்து பிடித்திருக்கிறது என்றும் மஜ்னூன் என்றும் கூறினர். ஆனால் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்த ஒரு சில அறியாமையுள்ள இளைஞர்களும் அடிமைகளும் அவருடைய பொய்களை நம்பினர். இந்த திறமைவாய்ந்த சமாளிப்புகளுக்கு நன்றிகள், அவருடைய முட்டாள் பின்பற்றிகள் போர்கள் புரிந்து, அப்பாவியான மக்களை கொன்று, சூறையாடி அவரை அதிகாரமிக்கவராக ஆக்கினர். அவர்கள் தங்களுடைய சின்னஞ்சிறு சிறுமிகளோடு பாலுறவு கொள்ளவும் அவரை அனுமதித்தனர். அந்த மனிதர் மண்டையில் சீக்கு பிடித்தவர். இஸ்லாம் என்பது இறைநிந்தனை. அது கடவுளுக்கு அவமதிப்பு. கடவுள் இருந்து அவர் மனிதர்கள் நம்புவது, சொல்வது ஆகியவற்றால் மனம் புண்படுபவராக இருந்தால், இஸ்லாமை தவிர வேறெதுவுமே அவரை அதிகமாக மனம் புண்படும்படி செய்யாது.
நம்பிக்கை கொள்ளாதவர்கள் நரகத்தில் அவர்கள் தாகமாயிருந்தாலும் கொதிக்கும் நீரை குடிக்கும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

முஹம்மது பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறினார். படைப்பாளரை ஒரு பைத்தியக்காரத்தனமான தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவராக (Lunatic narcissist) அவர் சித்தரித்தார் – மனிதர்களை அவர்கள் தன்னை  வணங்காததால்  நரகத்தில் என்றென்றைக்குமாக அவர் எரிப்பார் என்கிற அளவுக்கு கவனம் பெற அவ்வளவு தேவை உள்ள ஒரு பழிவாங்குகிற, அராஜக ஆட்சி செய்கிற, வேண்டுமென்றே செய்கிற ஒரு கடவுள். அதைவிட அதிக பைத்தியக்காரத்தனமானது வேறெதுவாக இருக்க முடியும்? தன்னுடைய குடிமக்கள் தன்னை இரவும் பகலும் வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அவர்கள் அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களை தண்டிக்கிற ஒரு அரசனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இப்படிப்பட்ட அரசன் பைத்தியக்காரனாக இருக்கமாட்டானா? பிறகு ஏன் இந்த பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறப்படும்போது  நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

தங்களுடைய கணவர்களுக்கு கீழ்படியாததால் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்கள்.

இந்த பெண்கள் அவர்களுடைய கணவர்கள் அவர்களை விரும்பியபோது அவர்களுடன் பாலுறவு கொள்ள மறுத்து என்றென்றைக்குமாக எரிவதற்காக நரகத்தில் போய் முடிவடைந்தார்கள். முஸ்லிம் பெண்ணாக அதுவே உங்களுடைய வெகுமதி. பெண்கள் மதிநுட்பத்தில் குறைபாடு உள்ளவர்கள் என்று முஹம்மது கூறினார். முகம்மதை போன்ற பெண்களை வெருப்பவனை நம்பி அந்த வன்முறையை நாடும் மனநோயாளியை கடவுளுடைய தீர்க்கதரி(நபி) என்று எண்ணுகிற எந்த பெண்ணுமே மதிநுட்பத்தில் குறைபாடு உள்ளவளாகவே இருக்க வேண்டும். இறுதியாக முஹம்மதோடு நான் ஒத்துபோகக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது.

நீங்கள் பொய்யை நம்புவதால் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் நரகமாக்கிக் கொண்டுள்ளீர்கள். அந்த பொய்யை நம்புவதை நிறுத்துங்கள். நீங்கள் விடுதலை ஆவீர்கள். உண்மை உங்களை விடுதலை ஆக்கும்.

மனிதர்கள் கடவுளை வணங்குவதை குறித்து முஹம்மது ஏன் அவ்வளவு கவலை கொண்டார்? அது ஏனெனில் அவர் தன்னை அவருடைய கடைசி தூதராக உரிமை கோரினார். நீங்கள் சொந்தமாக நீங்களாகவே கடவுளை வணங்க முடியாது. நீங்கள் முகம்மதுவையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் கடவுளுக்கு இணையாளர். அவருக்கு முன்பும் மக்கள் கடவுளை நம்பினர். யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஜோரோஷ்டிரர்கள் போன்று பலர் ஓரிறைக்கொள்கை உடையவர்களாகவே இருந்தனர். முஹம்மதுக்கு அது போதவில்லை. அவர்கள் அவரை நம்ப வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் பொய்யை புனைந்தார். அவரை நம்ப போதுமான அளவு மடத்தனமாக இருந்தவர்கள் அவரை அதிகாரமிக்கவராக ஆக்கினர். இந்த மனரீதியில் பிறழ்ந்துபோன பொய்யரால்  அவர்கள்மீது அவர்  மேலாதிக்கம் செய்வதற்காக இஸ்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொய்யரை நம்புவதை நிறுத்துங்கள். நீங்கள் விடுதலை ஆவீர்கள்.

நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகியவற்றுக்காக கடவுள் மனிதர்களை நரகத்திற்கு அனுப்புவதில்லை. அவர் அப்படி செய்தால், கபட வேடதாரியை நம்பியதற்காகவும் பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறியதற்காகவும் நரகத்திற்கு செல்வதற்கு முஸ்லிம்களே முதலாவதாக  இருப்பார்கள்.

தயவு செய்து இந்த அருமையான காணொளியை பாருங்கள் :

http://www.youtube.com/watch?v=ra9QQ58b7JY&feature=player_embedded

 

— அலி சினா

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s