முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

Posted on

“இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது”  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 9/11/2001 ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : ” இப்னு அஉன்  அறிவித்தார் : போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.” முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, “அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது” என்று கூறினார்.  ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

” எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது”  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த “எச்சரிக்கை” என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. “பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்” என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த’லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற “பயம் பற்றிய தொழுகை” (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 – 102)

“நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்”  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ’ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).  “அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்” என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

 

ஆசிரியர் : அலி சினா http://www.alisina.org   http://www.faithfreedom.org
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்

2 thoughts on “முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

    தமிழன் said:
    July 2, 2013 at 5:18 pm

    நண்பரே , நல்ல பதிவு. Please translate JONMC’s posts. That will create good impact in TN. முதலில் நாம் தூக்கத்தில் எழுப்பவேண்டியது காஃபிர்களைத்தான்.

    ஆனந்த் சாகர் said:
    July 4, 2013 at 5:45 am

    நண்பர் தமிழன்,

    உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி. நான் Jonmc யின் கட்டுரைகளை படித்திருக்கிறேன். அலி சினாவின் பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் Jonmc யின் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்க முயற்சிக்கிறேன். உங்களுடைய தார்மீக ஆதரவை இந்த தளத்திற்கு தொடர்ந்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s