முஹம்மது என்னை ஏன் மிக அதிகமாக அன்பு செய்கிறார்?

Posted on Updated on

Image

முகம்மதால் மிக அதிகமாக அன்பு செய்யப்படும் ஒரு நபர் நானாகத்தான்  இருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது. இல்லை. நான் நகைச்சுவை செய்யவில்லை. நான் விவரமாக சொல்கிறேன்.

எண்ணற்ற ஆன்மாக்களுக்கு பல நுற்றாண்டுகளாக துன்பத்தையும் வலியையும் தவிர வேறொன்றையும் வழங்காத இந்த இஸ்லாம் என்ற சாபத்தில் இருந்து இந்த உலகத்தை விடுவிப்பதற்காக என்றே போராட என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டேன். வெறுப்பையும்  வன்முறையையும் கொண்டுள்ள முஸ்லிம்களின் மதத்திலிருந்து,  அவர்கள் உண்மையை கண்டு, அந்த மதத்தை விட்டுவிடும்படி அவர்களுக்கு உதவி செய்ய நான் கடினமாக உழைக்கிறேன். ஆகவே முஹம்மது ஏன் என்னை அன்பு செய்யவேண்டும்? அவர்  செய்த அனைத்தையும், நான் நொறுக்குகிறேன் இல்லையா? பின் எவ்வாறு அவர்  என்னை மற்ற யாரைக்காட்டிலும் அதிகமாய் அன்பு செய்யமுடியும்?

மனிதர்களை எரிப்பதற்காக கடவுள் நரகத்தை உருவாக்குவார் என்பதை என்னால் நம்ப முடியாது. இது கடவுள் தன்மைக்கு எதிராக செல்கிறது. அன்பே கடவுள் என்றால், மேலும் கடவுளின் அன்பு நிபந்தனையற்றது என்றால், பின் நரகம் என்பது கடவுள் தன்மைக்கு பொருந்தாது.

இருப்பினும், நரகம் என்ற ஒன்றே இல்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. முஹம்மது விவரித்தது போல கடவுள் மக்களை தண்டிக்காவிட்டாலும், ஒரு சித்திரவதை கூடத்தை கொண்டிருக்காவிடிலும், நாம் நம்மையே தண்டிக்கமாட்டோம் என்று அர்த்தம் இல்லை.

நான் மேலே கூறியதுபோல் இந்த உலகமே ஒரு மாயை. இதையே 21ம் நூற்றாண்டு இயற்பியலாளர்கள் நமக்கு கூறுகிறார்கள். நாம் இங்கே இல்லை. எதோ ஒன்றை உருவாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பரிணாமத்தில் நாம் அனைவரும் இருந்துகொண்டு, நாம் ஒரு முப்பரிணாம உருவத்தை கட்டுப்படுத்துகிறோம். அந்த உருவத்தை நாம் உடல் என்றழைக்கிறோம். ஒரு நேரத்தில், இந்த உடலை உருவாக்குகின்ற அந்த முப்பரிணாம உருவம் சேதமடைகிறது. அப்போது நாம் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். நமக்கு ஒன்றுமே சம்பவிப்பதில்லை. நம் நினைவு, ஞாபகம், உணர்வு இவை பாதிக்கப்படுவதில்லை. முதலில் நாம் நம்முடைய உடலின்மிதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம் என்பதையேகூட சில நேரம் உணர்வதில்லை. ஆனால்அது எப்போது நம் கட்டளைகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதை காண்கிறோமோ அப்போது நாம் இறந்துவிட்டோம் என்பதை அறிந்து கொள்கிறோம். அந்த நொடியில், திடிரென்று இந்த உலகத்தின் மாயத்தோற்றம் மறைந்து விடுகிறது. அது நாம் ஒரு கனவில் இருந்து விழிப்பது போன்றதாகும். வாழ்க்கை என்ற விளையாட்டை நாம் எவ்வாறு விளையாடினோம் என்ற நினைவை நாம் அடைகிறோம். நாம் விழித்துக்கொள்ளும் அந்த நொடி களிப்பூட்டக்கூடியதாகவோ, ஆனந்தம் அடைய கூடியதாகவோ அல்லது வலி நிறைந்ததாகவோ, ஆழ்ந்த வருத்தம் அளிக்கக்கூடியதாகவோ இருக்கலாம். அது இந்த வாழக்கையை நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதையும், நாம் இந்த வாழ்வில் என்ன செய்தோம் என்பதையும் பொறுத்தது. கடவுள் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருக்கிறார். நாம் என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை மன்னிப்பார். காரணம் அதுவே அவரது குணமாகும். ஆனால் நாம் நம்மை மன்னிப்போமா இல்லையா என்பது வேறு விஷயம்.

இந்த உலகத்தில் கொடூரமான பண்புடையவர்களுக்கு மனச்சாட்சி என்பது இல்லை. இவர்கள் மற்றவர்களுக்கு தீமை செய்வார்கள். அதனால் அவர்கள் அனுபவிக்கும் வேதனையை உணர மாட்டார்கள். இது போன்ற கொடிய நாசீசிஸ்டுகள் மற்றும் கொடூரர்களுக்கு பச்சாத்தாபம் என்ற பண்பு குறைவாக இருக்கும். இந்த பச்சாத்தாபம் என்ற பண்பு அவர்களுக்கு குறைவாக இருப்பதால் அவர்கள் மற்றவர்களை துன்புறுத்துவதில்லை. அவர்கள் துன்புறுத்துவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மாறாக அதில் ஆனந்தம் கொள்கிறார்கள். முஹம்மது தான் மற்றவர்களுக்கு தீமைசெய்கிறோம் என்பதை தன் முழுமனதுடன் அறிந்திருந்தார்.  அவர்  ஆயிரக்கணக்கான மக்களை தாக்கி படுகொலை செய்தார் மற்றும் அவர்களை சூறையாடினார். அராபிய நாடோடிகள் சிலர் முஹம்மதின் ஆள் ஒருவனை தாக்கி     அவனை கொன்று முஹம்மது திருடிகொண்டுவந்த ஒட்டகத்தை திருடி சென்றார்களோ அப்போது முஹம்மது              அவரது  ஆட்களை அனுப்பி அவர்களை பிடித்துவர செய்தார். பின் அவர்களின் கைகால்களை வெட்டி வெய்யிலில் மெதுமெதுவாக சாகும்படி அவர்களை விட்டுவிட்டார். அவர் மற்றவர்களின் பொருட்களை திருடினார். ஆனால் மற்றவர்கள் இவரது  சொத்துக்களை திருடினால் அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றார். அவருக்கு  அறிவு இருந்தது. ஆனால் மனசாட்சி இல்லை.

எப்படியாகிலும் நாம் இறந்தபின், நாம் வாழ்க்கை என்றழைக்கும் இந்த கனவிலிருந்து விழித்துக் கொள்கிறோம். அப்போது நாம் நம்மால் செய்யப்பட்ட செய்கைகளை காண்கிறோம். அந்த நொடியில் நாம் குற்றவுணர்வு, குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தம் மற்றும் அவமானத்தால் நிறைவோம். இந்த வாழ்க்கையை வாழ்வதர்காக வழங்கப்பட்ட ஒரு சலுகையை எவ்வாறு நாசப்படுத்தினோம் என்றும் ஆன்மிகத்தில் வளர்வது என்ற மிக அரியதாய் கிடைக்ககூடிய வாய்ப்பை எவ்வாறு தொலைத்தோம் என்றும் உணர்வோம். எவ்வளவு ஆழமாக நாம் வேதனைகளை உண்டாகி இருக்கிறோம் என்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது.

இந்த உலகத்தில் நாம் கொண்டிருக்கும் ஒரு மாயதோற்றம் யாதெனில், நாம் அனைவரும் தனித்துவமான, தனிப்பட்ட தனிநபர்கள் என்பதாகும். உண்மையான ஆன்மீக உலகில் இந்த வேறுபாடு மறைந்து விடுகிறது. நாம் மற்றவர்களுக்கு செய்த வேதனைகளை நம்முடைய சொந்த ஆன்மாவில் அனுபவிப்போம். நாம்மால் பாதிக்கப்பட்டவர்களின் வலி நம்முடையதாகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு செய்வது, உங்களுக்கே செய்வது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆம், மறு உலகத்தில் அதுவே நிதர்சனமானது. இந்த உலகத்தில் நாம் தொடர்பு கொண்ட மனிதர்களின் அனுபவங்களில் அங்கு வாழ்வோம். நாம் அவர்களை அன்பு செய்தால், நாம் அந்த அன்பை அனுபவிப்போம். நாம் அவர்களை துன்புறுத்தினால் நாம் துன்புருவோம்.

இந்த இயற்பியல் உலகம் சில சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. நமக்கு புவிஈர்ப்புவிசை குறித்து தெரியும். நாம் ஒரு உயரமான இடத்தில் இருந்து குதித்தால் காயம் ஏற்ப்படும். யாரும் உங்களை தண்டிக்கவில்லை மற்றும் எவ்வளவு அதிகமான ஜெபங்களும் உங்களை காக்கப்போவதில்லை. புவிஈர்ப்புவிசை எனும் சட்டம் உங்களை ஆட்கொள்கிறது, மேலும் இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நான் உங்களை இவ்வுலகில் மகிழ்வித்தால், மிகச்சரியாக அதே போன்ற மகிழ்ச்சியை நான் மறு உலகில் பெறுவேன். அது ஒரு பூமாரங்க் போன்று எனக்கே திரும்பி வரும். நான் உங்களை வேதனைப்படுத்தினால், அதே வேதனையை என் ஆன்மாவில் அனுபவிப்பேன். இதையே நாம் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்கிறோம். விலைமாதுவும், சித்திரவைதை கூடங்களும் மறு உலகில் இல்லை. மற்றவர்களுக்கு நாம் என்ன என்ன செய்கிறோமோ அது பூமாரங்க் போன்று நமக்கே திரும்பி வரும். நீதித்தீர்ப்பு என்ற ஒன்று இல்லை. ஆனால் நீதி கிடைக்காதா என்று மற்றவர்களை ஏங்க வைத்த அதே உணர்வை நாம் அனுபவிப்போம். அதுவும் ஏனென்றால் நமது ஆன்மா அனைத்தும் ஒன்றாகும். ஆதலால் நாம் மற்றவர்களுக்கு செய்த அனைத்தும் உண்மையில் நாம் நமக்கே செய்கிறோம். எனது வலக்கை இடக்கையை கிள்ளி எறிந்தால், அந்த வலியை என் உடல் முழுவதும் அனுபவிக்கும். எனது வலக்கையும் இடக்கையும் வேறுவேறு அல்ல. அதேபோன்று நமது ஆன்மிக அனுபவமும் ஒன்றே என்பது நிதர்சனமாகும்.

இப்போது நீங்கள் ஒரு அதிகமான மக்களை கொன்ற ஒரு பாதகன் என்று கற்பனை செய்து கொள்ளவும். நீங்கள் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்ளை அன்பு செய்தவர்கள் அனுபவித்த அதே வேதனையை சுமப்பீர்கள். அவர்களின் அனுபவித்த அதே வேதனையில் நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் உங்களது பெயர் ஹிட்லர் என்றோ அல்லது முஹம்மது என்றோ இருந்தால்? எப்பேர்ப்பட்ட வேதனை உங்களால் இந்த உலகத்திற்கு வந்தது? எப்பேர்பட்ட துன்பத்தை நீங்கள் மற்றவர்களுக்கு செய்தீர்கள்? நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள்? இல்லை. முஹம்மதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பில்லியனை தாண்டும். இன்னும் அந்த எண்ணிக்கை முடியவில்லை. அவர்  இவர்கள் உணர்ந்த அதே வலியை உணர்கிறார். அது தாங்கிக்கொள்ள இயலாததாகும். பல ஆண்டுகளுக்கு முன் நான் என் அறியாமையால் நிகழ்ந்தவனவற்றை எப்போதெல்லாம் அது நியாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை நினைத்து வேதனை அடைகிறேன். செய்ததவறை உணர்ந்ததால் ஏற்படும் வருத்தம் எனக்கு ஒரு உதவியும் செய்யப் போவதில்லை. ஏனென்றல் எப்போது நான் இந்த மாயையான உடலை விட்டு போகிறேனோ,  அப்போது நான் மற்றவர்களுக்கு என் அறியாமையினால் செய்த அதே வேதனையை அச்சுபிசகாமல் அனுபவிக்கப் போகிறேன். இந்த தகவல்கள் தொலைந்து போவதில்லை. ஒன்றுமே அழிக்கப்படுவதில்லை. நான் யாரையும் கொலை செய்யவில்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. ஆனால் என் அன்பற்ற, கருணையற்ற வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்தி இருக்கிறேன். அப்போது அவர்கள் அனுபவித்த வேதனையை நான் இனி அனுபவிக்கப் போகிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நான் நல்லதும் செய்திருக்கிறேன் மற்றும் பிறரை அன்பும் செய்திருக்கிறேன். நான் அவற்றையும் அனுபவிக்கப்போகிறேன். இந்த நல்லவை நான் செய்த தீயனவற்றின் வீரியத்தை குறைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். முஹம்மாதால் பாதிக்கப்பட்ட பில்லியன் கணக்கான மக்களின் வலியை அவர்  எவ்வாறு தாங்கிகொள்வார்? அவர்
அவரை  பின்பற்றுபவர்கள் மூலம் மற்றவர்கள் அனுபவிக்கும் வேதனையையும் அனுபவிக்க வேண்டும். முஹம்மதே அவரை பின்பற்றுபவர்கள் செய்கின்ற செய்கைகளுக்கு முழுபொறுப்பாளர்
ஆவார் . நான் உங்களை நம்ப செய்வதின்மூலம், நீங்கள் தீமையானதை செய்தால் நீங்களும் நானும் நம் இருவருமே குற்றவாளிகள்.

நாம் இந்த உலகத்திற்கு அன்பு செய்வதிற்காக வந்துள்ளோம். இதுவே இந்த பிரபஞ்சத்தின் ஏக காரணமாகும். அதற்கு பதிலாக முஹம்மது வெறுப்பை வளர்த்தெடுத்தார். அவர் மிகவும் வெறுக்கத்தக்கதான, மிருகங்களும் செய்யாத கேவலமான குற்றங்களான பொய் சொல்லினார், ஏமாற்றினார், கொள்ளையடித்தார், சூறையாடினார், கொலைசெய்தார், அடிமைப்படுத்தினார், கற்பழித்தார். இவை அனைத்தையும் திமிர்பிடித்து அதிகாரத்தை பெற வேண்டும் என்ற சிற்றின்பத்தில் செய்தார். இப்போது அவர் இறந்துவிட்டார். அவர் மிக உயர்வானவர் என்ற திரைசீலை திறந்து விட்டது. அவர் செய்த அனைத்தை குறித்தும் அவருக்கு உணர்வு வந்துவிட்டது. இந்த உலகத்தில் பதவியின் மேலான அவரது  ஆசை அவர் கண்களை மறைத்திருந்தன. மறு உலகிலோ அவரது தீமையான செய்கைகள் குறித்து அவற்றின் விளைவுகள் குறித்து அவர் முழுஉணர்வோடு இருப்பார். அவர் அவர்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களையும்  அவரது ஆன்மா மூலமாக அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்.

கடவுள் முஹம்மதையும் கூட மன்னிப்பார். ஆனாலும் அவர் அந்த வலிகளை அனுபவிப்பார். அவர் கடவுளிடம் இருந்து வெகுதொலைவில் ஒளிந்திருப்பார். கடவுளை விட்டு வெகுதொலைவில் இருப்பது என்றால் அது நரகம். எங்கே அன்பு இல்லையோ அதுவே நரகமாகும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உள்ளது. நீங்கள் அன்பை விதைத்தால், அன்பை அறுவடை செய்வீர்கள். நீங்கள் வெறுப்பை விதைத்தால் வெறுப்பை அறுவடை செய்வீர்கள். தெளிந்த குளத்தில் கல் எறியும்போது ஏற்படும் சிற்றலைகளைபபோல, நம் செயல்கள் நாம் இறந்த பின்கூட எதிரொலிக்கும். சில நேரம் நூற்றாண்டுகள் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகள்கூட அவை எதிரொலிக்கும் .

முஹம்மதின் இந்த நீங்காத்துயரம் எத்தனை நாள் நீடிக்கும் என்று எண்ணி வியந்திருக்கிறேன். எப்போதெல்லாம் மக்கள் அவரது  பொய்களால் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர் வேதனைக்கு உள்ளாவார் என்று நான் உணர்ந்தேன். அப்போது திடீரென்று நானே முஹம்மதின் நம்ம்பிக்கை விளக்கு என்பதை உணர்த்து கொண்டேன். அவரது பொய்களை தெளிவிப்பத்தின் மூலம் இந்த உலகத்திற்கு அவர் கொண்டு வந்த தீமைகளை முடிவுக்கு கொண்டு வருவதின்மூலம்,  அவரது  முடிவில்லா மறு உலக துயரத்தில் இருந்து நான் அவரை  விடுவிக்கிறேன். இதுவே அவர்  அந்த நரகத்தில் இருந்து தப்புவதற்கான ஒரே ஒரு வாய்ப்பாகும். இப்போது அவர் ஏன் என் வெற்றிக்காக ஜெபிக்கிறார் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?

இரு வாரங்களுக்கு முன் 40 மாணவர்கள் நைஜீரியாவில் படுகொலை செய்யப்பட்டனர். குர்ஆனில் இல்லாத அனைத்தும் சாத்தானின் அறிவாகும் (Taghooti) and Jaheliyah. என்று முஹம்மதின் பொய்களை விசுவாசிக்கும் முஹம்மதின் நம்ம்பிக்கையாளர்களால் இந்த கொலைகள் செய்யப்பட்டது. 40 குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை முழுவதும் விசனப்படுவார்கள். முஹம்மது அவர்கள் ஒவ்வொருவரின் வலியையும், துன்பத்தையும் சுமப்பார். எப்போது முஸ்லிம்கள், அப்பாவிமக்களை முஹம்மதின் பேராலும் அவரது போலியான அல்லாவின் பேராலும் கொலை செய்கிறார்களோ, அப்போது அவர்கள் அதை முஹம்மதுக்காகவும் அவர்களுக்காகவும் செய்தார்கள்.

அவரது பேரால் மனிதர்கள் இங்கே தீமைகளை செய்து கொண்டிருக்கும் வரை அவர்  நரகத்திலேயே இருப்பார். அவர் கட்டவிழ்த்துவிட்ட தீமைகளை முடிவுக்கு கொண்டுவருவதின் மூலம் நாம் அவரை  இதில் இருந்து விடுவிக்கலாம். முஸ்லிம்கள் 1400 வருடமாக அவனுக்கு அமைதி உண்டாகட்டும் என தொழுகிறார்கள். ஆனால் அவரது பொய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கும்வரை அவர் நரக நெருப்பில் தான் இருப்பார். அவருக்கு சமாதானம் உண்டாக உள்ள ஒரே ஒரு வழி என்னவென்றால் அவரது கொடுமையான தீமைகளின் தாக்கத்தை வேரோடு பிடுங்கி எரிவதே.

ஹிட்லரால் உண்டான வலிகள் முடிந்துவிட்டன. கொடுமையான துயரத்திலிருந்து ஒரு நாள் அவர் விடுபட வாய்ப்புள்ளது. ஆனால் முகம்மதால் உண்டாகும் துயரங்கள் பெருகி வருகிறது. அவர் நரகத்திலேயே மிக மோசமான இடத்தில் இருக்க வேண்டும்.  நாம் அவர் மேல் கருணை காட்டுவோம். எப்போது நாம் அவரது தீமைகளின் தாகத்தில் இருந்து விடுபடுகிறோமோ அப்போது அவனது ஆன்மாவை கொடுமைப் படுத்திக்கொண்டிருக்கும் அவனது குற்ற உணர்வு எனும் நெருப்பில் இருந்து அவர் விடுபடுவார்.

 

ஆசிரியர் : அலி சினா

மொழியாக்கம் : அந்தோணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s