நாம் கடவுளை கண்டு அஞ்ச வேண்டுமா?

Image Posted on Updated on

அன்புடையீர்,

என் மனைவி, நான் மற்றும் எங்கள் குழந்தைகள் சேர்ந்து, 14-07-2013 அன்று இஸ்லாமை துறந்தோம். எங்களது முடிவை குறித்து அன்றைய பகல் பொழுதில் சந்தோசமாக இருந்தோம். ஆனால் இரவில் நாங்கள் அல்லாவுக்கு எதிராக பாவம் செய்து விட்டோம், அதற்காக அவரால் தண்டிக்கப்படுவோம் என்று சிந்திக்கலானோம். இந்த சிந்தனையில் இருந்து சமாளிக்க தாங்கள் எங்களுக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மறுபடி இந்த புதைகுழியில் நான் கால் வைக்கமாட்டேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த என் முடிவை பகிரங்கமாக அறிவிக்காதலால், இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும். என் தந்தை இதற்க்கு சம்மதிக்காமல் போனால் ஒருவேளை நான் அவரை இழக்க நேரிடும். நான் என்ன செய்வது? என் மனைவி இடம் இருந்து எனக்கு பிரச்சனை இல்லை. அவள் என் பக்கம். மேலும் என் மனைவி இந்த போலி மதத்தை (இஸ்லாம்) நம்புவதில்லை. அவள் கடந்த காலத்தை மறந்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என விரும்புகிறாள்.

அன்புடன் நிஜாம்

(உண்மை பெயர் அல்ல )

holographic-universe

அன்புள்ள நிஜாம்,

உங்கள் மின்னஞ்சலில் இரண்டு கேள்விகள் உள்ளன. நான் தங்களது இரண்டாவது கேள்விக்கு பலமுறை விளக்கமளித்துவிட்டேன். தாங்கள் தங்கள் குடும்பத்தாரிடம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்களை வேதனை அடையச் செய்வதினால் பயன் என்ன? மேலும் இக்கட்டான ஒரு சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? மத வழக்கங்களை கடைபிடிக்காத ஒரு நம்பிக்கையாளர் குறித்து ஒரு முஸ்லிம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.  நீங்கள் ஒரு நம்பிக்கையாளரே இல்லை என்பதே முஸ்லிமுக்கு பிரச்சனையானது. உங்கள் மத நம்பிக்கை தவிர்த்து மற்றபடி உங்கள் குடும்பத்தோடு உறவு பாராட்டுங்கள். எப்போது நீங்கள் அவர்களை வரவேற்கும் பண்புடையவர்களாய் காண்கிறீர்களோ அப்போது மெல்ல மெல்ல அவர்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் மத நம்பிக்கைகள் உங்கள் அன்பான குடும்ப உறவுகளை சிதைக்க அனுமதிக்காதீர்கள். நாம் மற்றவர்களுக்கு ஆன்மிக குருவாக வலம் வருவதற்காக இந்த உலகத்திற்கு வரவில்லை. நாம் இங்கே அன்பு செய்வதற்காக வந்துள்ளோம். குறிப்பாக நம் உற்றார் உறவினரை.

கடவுளின் தண்டனை பற்றிய உங்கள் பயம், ஒரு ஆதாரமற்றபயமாகும். கடவுள் உங்களை தண்டிப்பதில்லை. நீங்கள் பாவம் செய்தாலும் கடவுள் உங்களை நீதி தீர்ப்பதில்லை. தீர்ப்பு என்ற ஒன்று கடவுளிடம் இல்லை. அன்பே கடவுள். ஆம் ……. அன்பு – எல்லையற்ற ஒரு அன்பு. அனைத்தையும் ஏற்றுக்கொள்தலே கடவுளிடம் உள்ளது. எவ்வாறு சூரியனில் நிழல் இல்லையோ அவ்வாறே, பழிவாங்குதலும் கடுங்கோபமும் கடவுளிடம் இல்லை.

நான் வளர்த்த பூனையை நிபந்தனையற்ற அன்பு செய்தேன். அதன்மேல் உள்ள என் அன்பு குறையும்படியோ அல்லது அதை தண்டிக்கும்படியோ செய்யக்கூடிய, ஒன்றையும் அந்த பூனையால் செய்ய முடியாது. அதனுடைய இறப்பு மன வேதனை அளிக்ககூடிய ஒரு இழப்பு. நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு வாகனத்தில் விபத்திற்குள்ளானபோதிலிருந்து என் மனம் அதற்காய் ஏங்குகிறது. இரவு நேரங்களில் நான்உறங்குவர்தற்காக கண்களை மூடும்போது, அது என் காலடியில் உறங்குவதாக கற்பனை செய்துகொள்வேன் – என் காலடியே உறங்குவதற்கு அதற்கு மிகவும் பித்தமான இடம். நான் ஒரு தவறுகள் செய்யக்கூடிய பலவீனமான மனிதன். மேலும் அந்த மிருகம் எனக்கு சொந்தமும் இல்லை. ஒரு மனிதனால் ஒரு விலங்கை இத்தனை அதிகமாக அன்பு செய்ய முடியுமென்றால், கடவுள் என்ற நிபந்தனையற்ற அன்பு செய்யக்கூடிய ஒரு பூரணம் ,  தன்னுடைய சொந்த படைப்பை இன்னும் எத்தனை அதிகமாக அன்பு செய்யும்!

கடவுளின் கடும் கோபம் குறித்து பேசுபவர்கள் எல்லாம் கடவுள் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். பயத்தின் மூலமாக உங்களை கட்டுப்படுத்த நினைக்கும் ஒருபொய்யர், ஒரு  ஏமாற்றுக்காரர்.

ஆன்மீக போதனைகள் மற்றும் சித்தாந்தங்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள நாம் கடவுளின் தன்மை குறித்து அறிந்து கொள்ளவேண்டும். கடவுள் என்பது ஒரு பரிசுத்தமான அன்பு மற்றும் பரிசுத்தமான உணர்வுமாகும். நம்முடைய இயல்பிலிருந்து கடவுளின் இயல்பு வேறானதல்ல. நாம் கடவுளின் சாயலாகவே படைக்க பட்டிருக்கிறோம். கடவுளை பற்றி அறிந்து கொள்ள நாம் செய்யவேண்டியது என்னவென்றால், அவரை நாம் நம் ஆன்மாவில் தேட வேண்டும். கடவுளை காணவேண்டும் என்றால், நீங்கள் வானத்தை பார்க்க வேண்டாம். நீங்கள் உங்களில் உள்ளே தேடவேண்டும். நாம் எப்போது நம்முடைய உணர்வை முயன்று முயன்று அதிகமாக அடைகிறோமோ, நாம் அப்போது அன்பில் அதிகமாக வளர்கிறோம். அப்போது நாம் அதிகமாக கடவுளாகிறோம்.

நாம் இரட்டை தன்மை உள்ளவர்கள். ஒன்று மிருகத்தன்மை, மற்றொன்று ஆன்மிகத் தன்மை. பயம், பொறாமை, கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறையான உணர்வுகளை நாம் மிருகத்தன்மையிலிருந்து இருந்து பெறுகிறோம். அன்பு, ஆனந்தம், இரக்கம், கருணை, அமைதி, நம்பிக்கை போன்ற ஆன்மாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அனைத்தும் நம் ஆன்மிகத்தன்மையில் இருந்து வருகிறது. உங்கள் ஆன்மிகத் தன்மையை நீங்கள் உற்று நோக்கினால், கடவுளை காண்பீர்கள். கடவுள் எங்கோ வெளியில் இல்லை. இங்கே உங்களில் இருக்கிறார். கல்லினாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் கடவுளின் கோவிலாகாது. நீங்களே கடவுளின் கோவில். உங்கள் இருதயமே கடவுளின் அரியணை. எனவே கடவுள் உங்கள் கோவிலை ஆட்கொள்ளும்படி அவரது அரியணையை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைப்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆதவன் எங்கெங்கு காணினும் ஒளிர்கிறது. ஆனால் உங்களுடைய கண்ணாடி தூசி படிந்து அழுக்காக இருந்தால் அது பிரதிபலிக்காது.

இயேசு அவரை கடவுளின் மகன் என்றார். அவரேதான் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றார். குழந்தைகள் தகப்பனை ஒத்திருக்கின்றன. நாம் எவ்வாறு நம் சரீர சம்பந்தமான நம் தந்தையின் மரபணுக்களை நம் சரீர சம்பந்தமான உடலில் தாங்கி வருகிறோமோ, அவ்வாறே நாம் கடவுளின் ஆவியை நம் உடலில் கொண்டிருக்கிறோம். நாம் நம் தந்தையைப் போல் இருக்கிறோம். ஏனென்றால் நம் உடலில் உள்ள பாதியளவு மரபணுவானது அவரிடம் இருந்து வந்தது. நாம் நம் தாயைப்போல் இருக்கிறோம். ஏனென்றால் நம் உடலில் உள்ள பாதியளவு மரபணுவானது அவரிடம் இருந்து வந்தது. ஆனால் நம்முடைய ஆன்மீக சாரம் கடவுளிடம் இருந்து வந்தது. நாம் கடவுளின் குடியேறிகள். நம்முடைய ஆன்மாவும் கடவுளின் ஆன்மாவும் ஒன்றாகும். சமுத்திரத்தில் உள்ள ஒரு துளியைப்போலவே நாமும் ஒரு கடவுள்.

முஹம்மதும் முஸ்லிம்களும்…….. ஏசுவும் கடவுளும் ஒன்று என்று கிறிஸ்தவர்கள் விசுவசித்தபோது அவர்களை ஏளனம் செய்தனர். இது கடவுள் பற்றிய அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தியது. முஹம்மது கடவுள் ஒரு எதேச்சதிகாரி என்றும் தான் விரும்புவதை செய்யும் என்றும்  தன்னைப்போன்றே கடவுளுக்கும் ஒரு சட்ட திட்டமில்லை என்றும் எண்ணினார். அவரின் பரிதாபப்பட்ட புனிதமான வாழ்க்கை தத்துவத்தில், கடவுள் ஒரு சர்வாதிகாரி மற்றும் நாம் அனைவரும் அவரின் அடிமைகள். அந்த அறியாமை நிறைந்த மனிதன், கடவுள் என்றால் என்ன என்று அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு ஆன்மீக அறிவிலி. அவர் ஒரு (அஞ்ஞான) இருளில் சிக்கி கொண்ட ஒரு ஆன்மா. இதில் சோகம் என்னவென்றால், 1.5 பில்லியன் மக்கள் தூக்கி எறியப்பட்ட  ஒரு ஆன்மீக முட்டாளின் ஆன்மாவிடம் இருந்து ஆன்மீக வழிகாட்டுதலையும் ஆன்மீக நுண்அறிவையும் தேடுவதாகும்.

இயேசு கடவுளின் தன்மையை புரிந்து கொண்டார். இயேசு மட்டும் கடவுள் இல்லை. நீங்களும் நானும் கடவுள் தான். அனைத்தும் கடவுள் தான். இந்த பிரபஞ்சமே கடவுளின் பிரதிபலிப்பு தான். பல்வேறு அலைவரிசையில் இருக்கும் நாம் அனைவருமே கடவுளின் ஒளிதான்.

 

prism2

நியூட்டன்  சூரியனில் இருந்து வரும் ஒரு வெள்ளை ஒளிக் கற்றையை பிரித்து ஏழு நிற ஒளிகற்றையை காண்பித்தார். மிக அதிகமான வண்ண ஒளி கற்றைகள் இந்த வெள்ளை ஒளியில் உள்ளது. ஆனால் நம்மால் ஏழு நிறத்தை மட்டுமே காண முடியும். இந்த ஏழு நிறங்கள் இணைந்து பல பில்லியன் நிறங்களை நமக்கு காண்பிக்கின்றன. மேலும் அவற்றில் மில்லியன் நிறங்களை நாம் நம் கண்களால் வேறுபடுத்தி கண்டுணர முடியும். இந்த உலகத்தை மிக அழகுடனும் பல்வேறு விதமாகவும் வெளிபடுத்தும் இந்த நிறங்களின் சாராம்சம் அடிப்படையில் ஒன்றே. அவை அனைத்தும் சூரியனின் பிரதிபலிப்பே. அது போலவே நம்முடைய ஆன்மீக சாரமும் மற்றும் எல்லா உயிர்களின் ஆன்மீக சாரமும்(விலங்குகள், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின்) – கடவுளிடம் இருந்து வந்தவையே. அனைத்துமே கடவுளின் வெளிப்பாடாகும் – அதாவது அவரின் பிரதிபலிப்பு. அனைத்துமே கடவுள். கடவுளைத் தவிர வேறொன்றும் இல்லை.

கடவுள் என்றால் என்ன? கடவுள் என்றால், தூய்மையான உணர்வும் தூய்மையான அன்புமாகும்.

பல வருடங்களுக்கு முன்னால், எனக்கு ஒரு பிரத்யேகமான அனுபவம் உண்டானது. நான் ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு சில வினாடிகள் தூய்மையான உணர்வின் (உன்னதமான ஞானம் ) உலகம் எனக்கு காண்பிக்கப்பட்டது. நான் என் தலையில் இருக்கும் இரண்டு கண்களால் எதையும் காணவில்லை. மேலும் நான் என் காதுகளால் ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் அது இந்த பிரபஞ்சத்தின் முழு அறிவையும் என்னால் அணுகக்கூடியது போன்று இருந்தது. மிகசரியாக இதை விவரிக்க வேண்டும் என்றால், அறியப்படாத எங்கும் இருள் நிறைந்த ஒரு இடத்தில் நான் நின்று கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது திடீரென்று ஒரு மின்னல். சில வினாடிகள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்கின்றன. அந்த சில நொடிகள் என்னை சுற்றி நம்ப முடியாத அற்புதமான காட்சிகளை கண்டேன். அது ஒரு காட்சி அனுபவம் அல்ல. மாறாக, முழு உணர்வோடு பெற்ற ஒரு அனுபவம். நம் அனைவருக்கும்     பழக்கமான “ஆஹா” என்பது போன்ற ஒரு தருணம். இதுவும் அது போன்ற ஒன்று தான். ஆனால் எல்லையில்லாதொரு சக்தியோடு இருந்தது. எதோ ஒரு சிறு விளக்கு அல்ல. ஒரு சூரியனே என் தலையினுள் கடந்து சென்றது.

அந்த சுருக்கமான நேரத்தில், பொருட்கள் அனைத்துமே உணர்வாக உள்ளது என்று புரிந்துகொண்டேன். மேலும் அதிகமானவற்றை  தன்னுள் ஈர்த்துக்கொள்வதற்கு தொடர்ந்து அது போராடுகிறது என்றும் கண்டேன். பொருட்கள் வேறுவேறு படிநிலைகளில் உள்ளது என்பதை நீங்கள் காணவேண்டும். ஒரு பாறை, ஒரு மரம், ஒரு பூனை மற்றும் ஒரு மனிதன் அனைத்தும் இயற்பியல் இருப்பை கொண்டுள்ளது. உயர்வான ஒன்றில் காணப்படுகின்ற ஒரு இருப்பு நிலையானது, தாழ்வான ஒன்றில் காணப்படவில்லை. ஒரு மரத்தில் காணப்படுகின்ற ஒரு உயிர் பாறையில் காணப்படவில்லை.  பூனைக்கு புலன்கள் உண்டு. ஆனால் அவை மரத்திடம் காணப்படவில்லை. மிக உயர்வானதொரு உணர்வு மனிதர்களிடம் உள்ளது. அவை பூனையிடம் காணப்படவில்லை. எனவே பூனையைக் காட்டிலும் மனிதனின் நிலை உயர்வானது. மரத்தைக் காட்டிலும் பூனையின் நிலை உயர்வானது. பாறையை காட்டிலும் மரத்தின் நிலை உயர்வானது. உயர்வான நிலைக்கு பொருட்கள் நடத்தும் போராட்டமே பரிணாமம் என்பது.

இந்த அனைத்து படிநிலைகளின் மூலம் எது? முடிவற்ற யதார்த்தமே அது. வெறுமையே அனைத்தின் தாயாகும். அது ஒருமனிதம் அல்ல. ஆனால் அது ஒரு யதார்த்தம். அதுவே அனைத்தின் மூலம். அது புனிதமான உணர்வு (Consciousness/ஞானம்) மற்றும் புனிதமான அன்பு. இந்த புனிதமான உணர்வில்தான் (Consciousness/ஞானம்) இந்த பொருள் இருப்புநிலையே நிறுவப்பட்டுள்ளது. உணர்வே உயிரற்ற ஒன்றை உயிருள்ளதாக மாற்றுகின்றது. அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டுமல்ல, அனைத்துமே  உயிரும் புலன்களும் கூட  இந்த உணர்வின் ஆதரவில் இருக்கின்றவைதான்.

பொருள்நிலை(matter) அதிகமாக பரிணமிக்கும்போது, அது அதிகமாக கடவுளை பிரதிபலிக்கிறது. பொருள்நிலையில் உள்ள சிக்கலான கட்டமைப்பு, கடவுள்போல் ஆக தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு, உயர் நிலையை முயன்று அடைகிறது. பொருள் நிலை என்பது கடவுளின் கண்ணாடியாகும். மேலும் கடவுள் என்பது உணர்வாய் இருப்பதால், மேல்அதிக உணர்வை பெறுவதே பொருள்நிலையின் போராட்டம். அடைய வேண்டும் அல்லது கூடாது என்பது பொருள்நிலை மற்றும் பரிணாமத்தின் பின்னிருக்கும் சக்தியின் குழப்பம். இந்த பேராவலே நட்சத்திரங்கள், கிரகங்கள், உயிர் மற்றும் அறிவை முன்னெடுத்து செல்கின்றன. உயிரற்றவை பிரபஞ்ச உணர்வின் பொருளாக எப்போது விழிப்புணர்வை அடைகிறதோ அப்போது அவை உயிர் பெறுகின்றன.

கிரகிக்கும் இயந்திரம் போன்றே அனைத்தும்உள்ளன என்று நான் புரிந்து கொண்டேன். இயந்திரமான ஒரு கணிணிக்கும் ஒரு வானொலிக்கும் இடையேயான வித்தியாசம் என்னவெனில், கணினி என்பது பழச்சாறுபிழியும் ஒரு இயந்திரம் போன்றது. வானொலி என்பது ஒரு கிரகிக்கும் இயந்திரம் போன்றது. அது நம் புலன்களால் உணர இயலாத அலைகளை கிரகித்து அவற்றை நாம் கேட்க கூடிய ஒலியாய் மாற்றுகிறது. அதுவே நாம் அனைவரும். நாம் ஒரு கணிணி மட்டுமல்ல,  நாம் ஒரு கிரகிக்கும் இயந்திரம் கூடத்தான்.

இந்த கிரகிக்கும் இயந்திரமானது பரிணாம வளர்ச்சியில் பல கட்டங்களை கடந்து வருகின்றது. பரிணாம வளர்ச்சியில் உயர்நிலை அடையும் போது அது வெளிக் கொண்டுவரும் ஒலி மிக துல்லியமாகின்றது. தொலைக்காட்சிப் பெட்டியை , வானொலியின் பரிணாம வளர்ச்சியடைந்த பொருளாக நினைத்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் தொலைகாட்சி பெட்டி கருப்பு வெள்ளையாய் இருந்தது. பின் அவை பரிணாம வளர்ச்சியடைந்து வண்ண தொலைக்காட்சிப் பெட்டியானது. ஆனால் இன்றுள்ள தொலைகாட்சி பெட்டியோ சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மிகத்துல்லியமான வண்ணங்களை காண்பிக்கின்றது. இதற்கு மேல் வளர்ச்சியில்லை என்று நினைக்க எந்த காரணியும் இல்லை. எதிர்காலத்தில், உள்ளது உள்ளபடி காணக் கூடிய முப்பரிணாம தொலைகாட்சி பெட்டி கூட வர முடியும்.

பொருட்களும் இது போன்றதொரு பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுகின்றன. மிக உயர்ந்த பரிணாம வளர்ச்சி நிலையை அடையும் போது, மிக சிறந்த கிரகிக்கும் ஒரு இயந்திரமாக அது மாறுகிறது. ஆனால் அது எதை கிரகிக்கிறது என்பதே முக்கியமானது. இருப்பு நிலை, உயிர், புலன் மற்றும் உணர்வு இவற்றை ஒளிபரப்பும் அந்த நிலையம் எங்கே இருக்கின்றது. இந்த ஒளிபரப்பு நிலையமே அனைத்தின் மூலமாகும். சிலர் அதை கடவுள் என்கிறார்கள்.

நாம் அனைவரும் இங்கே இல்லை. ஒன்றுமே இங்கே இல்லை. நீங்கள் காண்பது ஒரு கானல் நீர் அல்லது போலியான தோற்றம். நமது யதார்த்தம் வேறு எங்கோ இருக்கின்றது. நாம் ஒருபோதும் அந்த மூலத்தை விட்டு விட வில்லை. நாம் ஒரு போதும் பிறப்பதும் இல்லை, ஒரு போதும் இறப்பதும் இல்லை. நாம் கடவுளோடு தான் இருக்கின்றோம். மேலும் என்றென்றும் அவருடனேயே இருப்போம். Pierre Teilhard de Chardin சொன்னது போல், மனிதத்தை அனுபவிக்கும் ஒரு ஆவியான ஆன்மாக்கள் நாம். நித்திய ஜீவன் உள்ள கடவுளை போன்று, நாமும் கடவுள். இப்போது இவை அனைத்தும் விசித்திரமானதாக, பொருளற்றதாக  தோன்றும். ஆனால் இதுவே பிரபஞ்சத்தின் தத்துவம் குறித்து, அதிகமான முன்னணி தத்துவார்த்த இயற்பியலாளர்கள்(theoretical physicists)  ஏற்றுக்கொள்ளும் ஒரு தத்துவமாகும்(theory). அவர்கள் இந்த பிரபஞ்சமே ஒரு முப்பரிமாண படிமம்(3D Image) என்கிறார்கள். நம்மை மனிதனாக மாற்றும் தகவல்கள் வேறு எங்கோ இருந்து வருகின்றன. அதாவது பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள எதோ ஒன்றிலிருந்து. அதை கடவுளென்றோ(God), மூலமென்றோ(Source), முடிவற்ற  ஞானமென்றோ(Infinite Wisdom) அல்லது வேறு ஏதாவதொன்றோ நீங்கள்அழைக்கலாம்.

இந்த அனுபவத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட அனைத்தும் மெய்மை குறித்து நான் தெரிந்து வைத்திருந்த அனைத்திற்கும் எதிராக இருந்தது. மூளை ஒரு கணிணியைப் போல் செயல்படுகிறது என்பதே என் புரிதலாகும். அது நமது எண்ணங்களையும் அனுபவங்களையும் உருவாக்குகின்றது. என் அனுபவத்தில் ஏற்பட்ட  நாம் அனைவருமே ஒரு கிரகிக்கும் இயந்திரம் தான் எனும் ஒரு யோசனை மிகவும் வினோதமானதாக இருந்தது. அதைப் பற்றி நான் அதிகமாக சிந்தனை செய்தேன். இயற்பியல் இந்த அனுபவத்தை உறுதி செய்கிறது என்பதை  சமீபத்தில் தான் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.

அனைத்துமே கடவுளின் பிரதிபலிப்பாகும். பரிணாமத்தில்  உயர் நிலையை அடைந்த நாய் என்ற விலங்கு வெளிபடுத்துகின்ற ஒரு மகத்தான அன்பு, கடவுளிடம் உள்ள நிபந்தனையற்ற பொதுவான அன்பின் பிரதிபலிப்பாகும். ஆம், இந்த உன்னதமான விலங்கு மனநிலை பாதிப்புக்காளான முகம்மதால் மிக அதிகமாக வெறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த முஹம்மதும் நம்மைப் போல் மற்ற அனைத்தும் போல் கடவுளால் நிகழ்ந்தவர்தான். மேலும் மனிதர்களே இந்த உலகத்தில் உள்ள மிக மேம்பட்ட ஒரு உயிரியல் கிரகிப்பாளர்களாகும். நாம் மற்ற விலங்குகளைவிட மிக அதிக செறிவுடன் கடவுளை பிரதி பலிக்க முடியும். ஒருவேளை விலங்குகளை, கடவுளின் ஒலியை மட்டும் கிரகிக்கும் வானொலியோடு ஒப்பிட்டால், நாம் கடவுளின் வடிவத்தையும் கிரகிக்கும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை போன்றவர்கள். அதாவது அவரின் உணர்வையும் அன்பையும் மிகமிக துல்லியமாக முழு வண்ணத்தில் பெறும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிபெட்டியை போன்றவர்கள்.

நாம்மால் எந்த அளவு கடவுள் தன்மையை கிரகிக்க முடியும் என்பதே இங்கிருக்கும் சாவாலாகும். அன்பே கடவுள் என்றால், நாம் அதிகமாக அன்பு செய்தால், நாம் அதிகமாக கடவுள் போல் ஆகிறோம். நன்மை, தீமை என்ற கேள்வி இங்கே ஊமையாகி விடுகிறது. எப்படி என்றால், வெளிச்சத்தில் எப்படி நிழல் இல்லையோ, அப்படியே கடவுளில் சாத்தான் இல்லை. அவை அனைத்தும் நன்மைகளின் சாயல்களே. எங்கே மிக குறைந்த அன்பு அல்லது அன்பே இல்லையோ, அதுவே ஒளியற்ற நரகமாகும். எங்கே அன்பு இல்லையோ அங்கே கடவுள் இல்லை. எங்கே கடவுள் இல்லையோ அதுவே நரகம்.

முஹம்மது எவ்வாறு கடவுளை புரிந்து கொண்டார்?  முட்டாள்தனமான அவரது மொத்த மதமும் அச்சத்தை அடிப்படையாக கொண்டது. மொத்தத்தில் முஸ்லிம்கள் அனுப்பும் அனைத்து மின்அஞ்சல்களுமே இந்த பயத்தை எதிரொலிக்கிறது. அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் படித்தவர்களானாலும் சரி அல்லது படிக்காதவர்களானாலும் சரி எனக்காக காத்திருக்கும் தண்டனைகள் குறித்து என்னை எச்சரிக்கிறார்கள். பயம் அவர்கள் சிந்தையை முடக்கிப்போட்டு விட்டது. ஆனால், அன்பை கண்டு அஞ்சுவதைப் போல் கடவுளை கண்டு அஞ்சுவது அபத்தமானது. அன்பை கண்டு எப்படி ஒருவர் அஞ்ச முடியும்? அறியாமையிலிருந்து தான் அச்சம் வருகிறது. முஹம்மது கடவுள் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் குருடனாய் இருந்தார். அவர்  தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் ஒரு மன நோயாளி(narcissist).   அவர் மக்களை கையாள அச்சத்தை ஒரு ஆயுதமாக பயன் படுத்தினார். 1.5 பில்லியன் மக்கள் (அஞ்ஞான) இருளில் சிக்கி கொண்டு, இறந்து போன ஒரு மனநிலை பாதிப்புக்காளான

ஒருவரிடம் முட்டளாகும்படி தாமாகவே செல்கிறார்கள். முஸ்லிம்கள் நரகத்தில் வாழ்கிறார்கள். மேலும்  இந்த உலகத்தை நரகமாக மாற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இருதயம் அச்சத்தால் நிரப்பப்பட்டுள்ளது. அச்சத்தால் தீட்டுப்பட்ட ஒரு இருதயத்தினுள் அன்பு நுழைய முடியாது. எனவே தான் இஸ்லாமியர்கள் இறைவனிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்கள். புத்திப்பேதலித்த ஒரு நோயாளியின் கற்பனை கதைகளை தொழுதுவிட்டு, அவர்கள் மட்டுமே ஒரு உன்னதமான படைப்பு என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வுலகிலும் மேலுலகிலும் நரகத்திலேயே வாழ்வார்கள்.

இவ்வுலகிற்கும் அவ்வுலகிற்கும் வித்தியாசம் இல்லை. நாம் ஏற்கனவே அவ்வுலகில் தான் இருக்கிறோம். நம்முடைய தலையானது மிக மிக ஆழமாய் இவ்வுலகில் சிக்கிக்கொண்டதால், கண்ணுக்கு தெரியாத உலகில் நிதர்சனமாய் உள்ள நம்முடைய முழுமையான படைப்பையும் ஆன்மாவையும் நம்மால் காண முடிவதில்லை. சக மனிதனை அன்பு செய்ய உங்களிடம் அன்பு இல்லை என்றால், நீங்கள் இந்த உலகம் முஸ்லிம்கள் மற்றும் காபிர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்றால், மேலும் முஹம்மதின் பைத்தியக்காரத்தனத்தை யார் கடைப் பிடிக்கவில்லையோ அவன் ஒரு மிக கேவலமானபடைப்பு என்றால்(குர்ஆன் 98:6), அதே சமயம் நீங்களும் உங்கள் மத தீவிரவாத தோழர்களும் மிக உயர்ந்த மனிதர்கள் என்று நினைத்தால்(Q. 3:110), முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோர் மேல் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும் என்று உங்கள் கடவுள் சொல்லியிருக்கிறார் என்றால்(குர்ஆன்  9:71), மேலும் அவர்களை உங்கள் நண்பர்களாக கொள்ளவேண்டாம் என்றால்(குர்ஆன்  5:51), பதிலாக அவர்கள் இருதயத்தில் நீங்கள் திகிலை உண்டாக்குங்கள்(குர்ஆன் 8:12)  என்பதை ஒத்துக்கொண்டால், நீங்கள் ஏற்கனவே நரகத்தில் தான் இருக்கிறீர்கள். என்ன? அதை நீங்கள் இன்னும் உணரமட்டும் தான் இல்லை. வாழ்கை எனும் இந்த மாயத் தோற்றம் அகற்றப்படும் போது , நரகத்தில் மிக ஆழமாக இருப்பதை கண்டு கொள்வீர்கள். சக மனிதன் மேல் நீங்கள் கொண்ட வெறுப்பு உங்கள் ஆன்மாவை இறைவனின் ஒளியையும் பிரதி பலிக்க முடியாத அளவு இருண்டு போக செய்துவிட்டது. எங்கே அன்பு இல்லையோ , அங்கே இறைவன் இல்லை.  எங்கே இறைவன் இல்லையோ, அதுவே நரகம்.

நீங்கள் முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள் நண்பரே. ஒரு மன நோயாளியினால் முற்றிலுமாக முட்டாளாக்கப்பட்டுவிட்டீர்கள். அவர் நரகத்தில் தான் இருக்கிறார். மேலும் நீங்களும் இப்போது அவருடன் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இருவரும் சந்திப்பீர்கள் என்பது எனக்கு சந்தேகம் தான். ஒருவரின் நரக குடியுரிமையை மற்றவர்களால் உணர முடியாது. அந்த நரக குடியுரிமையானது மிக அதிகமாய் தன்னையே உருஞ்சிக்கொள்வதால், தனது நித்திய காலம் முழுவதும் அது தனிமையில் கடந்து செல்லும். வெறுப்பை களைந்து விட்டு நீங்கள் மனிதம் என்பதை உணருங்கள். நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதை குறித்து கடவுள் கவலைப்படுவதில்லை. அன்பே பிரதானமாய் அவசியப்படுகிறது. எல்லா நிறமும் சூரியனில் இருந்து வருவது போல், எல்லா அன்பும் இறைவனிடம் இருந்து வருகிறது. நீங்கள் மற்றவரை அன்பு செய்யவில்லை என்றால், அதன் காரணம் அன்பு என்ற ஒன்று உங்களிடம் இல்லை. அதாவது கடவுள் உங்களிடம் இல்லை என்பதே அதன் அர்த்தம். இறைவனின் அன்பு எப்போதும் அங்கேயே தான் இருக்கின்றது. நீங்கள் தான் அது வேண்டாம் என்று உங்கள் முதுகை காட்டி செல்கிறீர்கள்.

நீங்கள் இரண்டு முதலாளிக்கு வேலை செய்ய முடியாது. நீங்கள் தன்னை மட்டுமே அன்பு செய்து மற்ற யாரையும் அன்பு செய்யாத குண்டரை, ஒரு பாலியல் பலாத்காரம் செய்பவரை, ஒரு வெகுஜன கொலைகாரனை, மேலும் தன் வாழ்கை முழுவதும் குற்றங்களையே நிறைத்த ஒருவனையும், அன்பே உருவான இறைவனையும் ஒரே நேரத்தில் பின் தொடர முடியாது. என்னவாயிற்று உங்களுக்கு? முஹம்மதைப் போன்ற ஒரு குற்றவாளி இறைவனை அடைய உங்களை நல்வழி நடத்துவார் என்று எவ்வாறு நீங்கள் எதிர்ப் பார்கிறீர்கள்? இந்த முட்டாள்தனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு சுய நினைவுக்கு வாருங்கள். நீங்கள் கடவுளின் குழந்தை. அன்புக்காகவும் இறைவனுக்காகவும் உங்கள் இருதயத்தை திறந்து மனித குலத்தை சிநேகத்தோடு நெஞ்சாரத் தழுவிக்கொள்ளுங்கள். சக மனிதனை நீங்கள் அன்பு செய்யவில்லை என்றால் நீங்கள் இறைவனை அன்பு செய்ய முடியாது.

நீதிக்கதைகள் மூலம் இயேசு இதை வெளிப்படுத்தினார். இயேசு சொன்னார் “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து : வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் உபசரித்து சேர்த்துக்கொண்டீர்கள்; ஆடையில்லாதிருந்தேன், உடுத்திநீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்என்பார். “அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு பிரதியுத்தரமாக : ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மை பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மை தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தை தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராக கண்டு உம்மை சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக்கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக : மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்பார்(மத்தேயு 25: 34-40).

mother_teresaபசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்;

நமது சக மனிதனை அன்பு செய்வதின் மூலம் நாம் இறைவனை அன்பு செய்யலாம். நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்த்துக் கூறும் சாதாரண மனிதர்களில் கடவுள் இருக்கிறார். ஆனால் முஸ்லீம்களாகிய நீங்கள் கேவலம் கெட்ட உங்கள் மத நம்பிக்கையின் பொருட்டு, இந்த சக மனிதர்களை வெறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். எவ்வளவு பரிதாபகரமான நிலை உங்களுடையது? மற்றவர்களுடைய அனைத்து அறிவியலையும் குரங்குகளைப் போல் கற்று நகலெடுத்து கொண்டீர்கள். உங்களுக்கு கணிணியை பற்றி தெரியும். மருத்துவம், ஏன் அணு குண்டு செய்வது எப்படி என்றும் கூடத் தெரியும். ஆனால் உண்மையின், அன்பின் இறைவனைப்பற்றித் தெரியாது.

 

Muslims-burn-church-in-Nigeriaவெகுவிரைவில் நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இதயத்தில் திகிலை உண்டாக்குவோம் (குர்ஆன் 3:151).

 

Muslim-massacre-Christians-in-Nigeriaபின் அவர்கள் கழுத்தை நொறுக்குவோம். மேலும் அவர்கள் அனைத்து விரல்களையும் நொறுக்குவோம் (குர்ஆன் 8:12).

 

இந்த கட்டுரையானது, நான் இதுவரை எழுதிய மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நான் இதுவரை செல்லாத தளத்திற்கு சென்றேன்.  இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் குவாண்டம் இயற்பியலில் செய்யப்பட்ட புதிய கண்டு பிடிப்புகள், பிரபஞ்சம் குறித்தான நமது புரிதலில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியை கொண்டுவந்து விட்டது. மேலும் நாம் யார் என்பதை குறித்தும்  எங்கிருந்து வந்தோம் என்பதை குறித்தும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையேயான புரிதல் உள்ள இடைவெளி மிக வேகமாக மறைந்து வருகிறது. நாம் இங்கே உண்டாயிருப்பதை முற்றிலும் பொருள்சார்ந்து விளக்குவதை இனிமேல் நிருபிக்க முடியாது.

இருப்பினும் மதம் குறித்தான Professor Dawkins அவர்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இறுமாப்புள்ள மதம் விஷம்போன்றது. ஒருவரையும் பின்பற்றகூடாது என்று நான் சொன்னாலும்கூட, புத்தர், இயேசு மற்றும் பல இந்து ஞானிகளின் போதனைகளில் அதித ஞானத்தையும் அழகையும் காண்கிறேன். ஆனால் சோகத்திலும் சோகமாக, இந்த ஞானிகளின் சீடர்கள் அந்த ஞான வாழ்வை தங்கள் உடலில் வாழவில்லை. இருந்தாலும், ஞான ஒளியைப் பெற்ற இந்த ஆன்மாக்களின் பெரும்பாலான போதனைகளை அறிவியல் இறுதியாக உறுதிப்படுத்தி விட்டது.

காணும் பொருளே உண்மை என்னும் வாதம் இறந்து வருகிறது. நமக்கு பரிட்சயமான இந்த நியுட்டானிய உலகம் என்பது உண்மையில் இந்த பிரபஞ்சத்தின் யதார்த்தம் இல்லை என்று குவாண்டம் இயற்பியல் நமக்கு காண்பிக்கின்றது. இந்த பிரபஞ்சத்தின் அஸ்திவாரமானது, நியுட்டனின் சட்டங்களுக்கு கீழ்படியாத துகள்களை(particles) அடிப்படையாக கொண்டுள்ளது. உண்மையில், இந்த பிரபஞ்சம் ஒரே ஒரு துகளால் ஆனதாக இருக்கலாம். முடிவில்லா இடங்களில் ஒரே நேரத்தில் தனக்குள்ளேயே ஊடாடி சிருஷ்டித்துக்கொண்டு ஒரு முடிவற்ற பிரபஞ்ம் போல ஒரு மாயத்தோற்றத்தை தருகின்றது. வியப்பாக உள்ளதா?  அவசியம் இல்லை. பிரபஞ்சமானது ஒரு எலக்ட்ரானினால் ஆனது என்ற மிகவும் நம்பத்தகுந்த தத்துவம் , நோபல் பரிசு பெற்ற John Wheeler என்பவரால் சொல்லப்பட்டது. மேலும் அதுவே யதார்த்தமும்கூட.

அதனுடைய விளைவுகளை எண்ணிப் பார்க்கவும். அதன் அர்த்தம் நாம் அனைவருமே ஒரே ஒரு எலக்ட்ரானால் ஆனவர்கள். நாம் அனைவரும் பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப நிகழும் ஒரே ஒரு பொருளால் ஆனவர்கள். இப்போது நாம் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு அபத்தமானது? ஒரு பூனை கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை மிரட்டுவதை  நீங்கள் கண்டதில்லையா?

உயிரோடு வாழும் இந்த தருணம் உண்மையில் அற்புதமானது. முதன்முதலாக இங்கே நாம் எவ்வாறு உண்டாகினோம், இந்த பிரபஞ்சம் எவ்வாறு உண்டானது என்ற மிகப் பெரிய மர்மத்தை அறிந்து கொள்ளப் போகும் ஒரு வாயிற்படியில் நாம் நிற்கிறோம். அந்த மர்மம் சில வருடங்களுக்கு முன் நம் முன்னோர்களால், ஏன் நம்மாலும்கூட கண்டுணர்ந்தாக இருக்கும்.

முப்பரிமாண பிரபஞ்சம் குறித்து அறிந்து கொள்ள விருப்பமுடையவர்கள் பின்வரும் காணொளியை காணவும்.

http://www.youtube.com/watch?v=2DIl3Hfh9tY

http://www.youtube.com/watch?v=QuANDlrTHyI

மேலும் இறந்து மறு உலகிற்கு சென்று திரும்பி வந்த இந்த இரு பெண்மணிகளின் கதைகளையும் கேட்க வேண்டும் என நான் மிக உறுதியாக  உங்களை அழைக்கிறேன்..

http://www.trans4mind.com/spiritual/myers4.html

காணுங்கள். இந்த உலகத்தை குறித்து உங்கள் பார்வையை மாற்ற தயாராக இருங்கள். யதார்த்தம் நாம் நினைப்பது போல் இல்லை.

 

— அலி சினா

மொழியாக்கம் :  அந்தோணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s