Month: October 2013

முன்வினை பயன் மற்றும் மறுஉலக வாழ்வு

Posted on Updated on

மறுஉலக வாழ்வு பற்றிய என் கருத்துக்களை நான் வெளியிட்ட பின்னர், பல கேள்விகள் என் முன் வைக்கப்பட்டன. இந்த கட்டுரையில் அதற்கான பதில்களை தர முயற்சித்துள்ளேன். இதுவே இந்த தலைப்பு குறித்தான இறுதியான கட்டுரையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் இஸ்லாம் குறித்தான தலைப்புகளுக்கே செல்ல விரும்புகிறேன்.

முஸ்லிம்களும் மறுஉலக வாழ்வு உண்டு என கூறுகின்றனர். நாம் அவர்களை ஒத்துக் கொள்வதில்லை, சரிதானே? நம்மைப் பொறுத்தவரை அது எந்த அடிப்படையையும் கொண்ட ஒன்றில்லை.

மறுஉலக வாழ்வு இருக்கிறது என்று நிருபிப்பதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் உள்ளன.   “கடவுளையும் மறுஉலக வாழ்வையும் இப்போது ஏன் நான் நம்புகிறேன்” என்ற என் கட்டுரையில், சரிபார்த்து அறிந்துகொள்ளக்கூடிய NDE (இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) அனுபவங்களை தந்துள்ளேன். நான் எப்போதெல்லாம் அது போன்ற காணொளிகளை மேலும் காண்கிறேனோ, அப்போதெல்லாம் மேற்கொண்டு அதை இங்கே இணைத்திடுவேன். சாட்சியங்கள் மீது தான் அறிவியல் கட்டப்பட்டுள்ளது. சாட்சியங்களை மறுதலித்தால் நாம் அறிவியலை மறுதலிக்கிறோம்.

உண்மை என்னவெனில் மறுஉலக வாழ்வு உண்டு என்று முஹம்மது சொன்னது, அவரை உண்மையாளர் ஆக்காது. அவருடைய காலத்தில் அனைவருமே மறுஉலக வாழ்வு உண்டு என்றே நம்பினர். , மக்களை முட்டாளாக்கி திறமையாக கையாள இந்த நம்பிக்கையை அவர் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.

ஏன் அனைவருக்கும் இந்த NDE அனுபவம் ஏற்பட்டு, அந்த அனுபவத்தை இந்த உலகுக்கு அறிவிக்கவில்லை?

நூற்றுக்கும் மேற்பட்ட NDE அனுபவங்களின் மீது நடத்தப்பட்ட ஆராய்சிகளின்படி, சுமார் ஐந்துபேரில் ஒருவருக்கு NDE அனுபவம் ஏற்படுகிறது. ஏன் மற்ற அனைவருக்கும் ஏற்படவில்லை என்பது ஆராய்சியாளர்களுக்கு புதிராகவே இருக்கிறது. இருப்பினும், சிலருக்கே ஆன்மா இருக்கிறது என்றும் பலருக்கு ஆன்மா இல்லை என்றும் நாம் கருதி விடமுடியாது.

நீங்கள் முன்வினைப்பலன்(Karma) பற்றி குறிப்பிடவில்லை. முன்வினைப்பலன் இல்லை என்றால் நீதியில்லை.

முன்வினைப்பலனின் கோட்பாடு என்னவெனில், இந்த ஜென்மத்தில் நீங்கள் தீமை செய்தால், மறு ஜென்மத்தில் நீங்கள் தாழ்ந்த குடியிலோ அல்லது அதனினும் கீழான ஒரு விலங்காகவோ பிறந்து, இந்த பிரபஞ்சத்திற்கு அளிக்க வேண்டிய உங்கள் கடன்களை கொடுத்து தீரும் மட்டும்  ஒரு பரிதாபகரமான வாழ்க்கை உங்களுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.

அன்னை தெரசாவை அன்பு செய்வதைப் போலவே வெகுஜன கொலைகாரர்களான ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் இருவரும் அன்பு செய்யப்படுவார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

ஆம், கடவுள் வேற்றுமை பாராட்டுவது இல்லை. அவர் அனைவரையும் ஒன்றாகவே நேசிக்கிறார். ஏன், அவர் மனிதர்களை நேசிக்கும் அதே அன்பில்தான் விலங்குகளையும் மரங்களையும் நேசிக்கிறார். அன்பு செய்வதே அவரது இயல்பு. அன்புசெய்வதைத்தவிரஅவரால்வேறுஒன்றும்செய்யமுடியாது.

“ஆனால்”,  ஆம், ஒரு பெரிய “ஆனால்” மிஞ்சி இருக்கிறது. கடவுளிடம் நியாயத்தீர்ப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும், ஒவ்வொரு சிந்தனைக்கும் சொல்லுக்கும் மற்றும் செயலுக்கும் எவ்வித தண்டனையும் கிடையாது என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்கள் உங்கள் கைகளை நெருப்பில் வைத்தால், தீக்காயம் ஏற்படுகிறது. யாரும் வந்து உங்களைத் தண்டிக்க வில்லை. இயற்பியல் சட்டத்தை நீங்கள் மீறியதற்கான விலையாக அந்த தீக்காயத்தை பெற்றீர்கள். அதேபோன்று எப்போதெல்லாம் நாம் ஆன்மீக சட்டத்தை மீறுகிறோமோ அப்போதெல்லாம் நம்முடைய செய்கைகளுக்கான விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். நாம் இயற்பியல் சட்டத்தை மீறும்போது அதன் விளைவு உடனடியாக நடப்பதைப் போன்றே, இதுவும் உடனடியாக நடைபெறுகின்றது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், இந்த உலகத்தை விட்டு செல்வதுவரை நாம் இது பற்றி அறிவது இல்லை.

இந்த காணொளியில் உள்ள நபர் நமது செய்கைகளுக்கான பலன் என்ன என்பதை விளக்குகிறார். மக்களின் நிலை என்ன?

நமது தனித்துவம் என்பது ஒரு மாயை. கருப்பொருளில் நாம் அனைவருமே ஒன்று தான். உங்கள் கைகளின் விரல்களைப் பாருங்கள். நீங்கள் அதன் அடிபாகத்தை மறைத்தால், அவை அனைத்தும் பிரிந்து தனித்துவமானதாகத் தோன்றும். ஆனால் அவை அனைத்தும் ஒரே கையின் விரல்களாகும். உடம்பில் ஏதாவதொறு பாகம் காயம் அடைந்தால், உடம்பின் அனைத்து உறுப்புகளும் அந்த காயத்தின் வேதனையை அனுபவிக்கிறது. உடலும் ஆன்மாவும் இணைந்து நாம் அமையப் பெற்றிருக்கிறோம்.  கடவுளை துண்டுகளும் துணூக்குகளுமாக பிரித்ததே நம் அனைவரின் ஆன்மாவாகும். மேலும் இந்த பிரபஞ்ஜமானது ஒற்றை எலக்ட்ரானால் ஆனது என்று சொல்கின்ற ஒரு தத்துவம்(theory) இருக்கிறது.  துகள்களால் இரண்டாகவோ அல்லது முடிவற்ற எல்லையில்லா இடங்களிலோ ஒரே நேரத்தில் இருக்க முடியும். அப்படியென்றால், நீங்களும் நானும் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரே துகளினால் ஆனதாகும். எனவே, ஒரே மூலத்தில் இருந்து நமது ஆன்மா மட்டும் வரவில்லை. உடல் ரீதியாகவும்கூட நாம் அனைவரும் ஒன்றுதான். இப்போது நாம் இருக்கும் இந்த தளத்திலிருந்து அனைத்தும் ஒன்று என்ற தத்துவத்தை நம்மால் காண முடியாது. எப்போது நாம் இங்கிருந்து கடந்து மறுஉலகத்திற்குள் நுழைகிறோமோ, அப்போது மற்றவர்களுக்கு நாம் செய்த அனைத்தும், நமக்கே செய்தோம் என்ற அனைத்தையும் காண்கிறோம். மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த எல்லா வேதனைகளும் எல்லா சந்தோசங்களும் ஒன்றும் கூடாமல் ஒன்றும் குறையாமல் நூறு சதவீதம் உங்களுக்கே திரும்ப வந்து சேரும். காலம் எனும் பரிமாணம் அற்றதாய் மறுஉலகம் இருப்பதால், நித்தியமும் கணநேரமும் ஒன்றாகி விடுகிறது. எனவே, இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த வேதனை சிறிது நேரமே நீடித்து இருப்பினும், மறுஉலகத்தில் நீங்கள் அதை நித்தியமாக அனுபவிப்பீர்கள்.

அத்துடன் முன்வினைபயன் என்பது  காரணமும்-விளைவும் (cause and effect) என்ற கோட்பாடையும் அடிப்படையாக கொண்டது.

நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை என்ற வடிவமாக முன்வினைபயன் இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காக வேதனையடைய இந்த உலகத்திற்கே மறுபடி நாம் திரும்ப அனுப்பப்பட்டால், அது தண்டனையாகும். நமது செயலுக்கான விளைவு உடனுக்குடன் நடந்துவிடுகிறது. ஆனால் மறுஉலகவாழ்வில் அந்த திரைசீலை விலகும்போதுதான் நம்மால் அதை அறிந்து கொள்ளமுடிகிறது.

முன்வினைப்பயன் என்ற தத்துவத்தில், மேலும் ஒரு முரண்பாடுஉள்ளது. ஒருவர், அவர் என்ன குற்றம் செய்ததிற்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று சொல்லாமல் தண்டிக்கப்படுகிறார். அது அநிதீயாகும். சில மதங்கள் நம்புவதுபோல் இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடமென்றால், என்ன விதமான பாடங்கள் நாம் படிக்க வேண்டும் என்று கட்டாயம் அறிவுறுத்தப்பட வேண்டும். என்ன விதமான பாடங்களை எதற்காக எப்படி படிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லாமல், அனைத்தையும் எவ்வாறு நாம் கற்க முடியும். அதற்காக அன்பே உருவான ஒரு கடவுள் எப்படி நம்மை தண்டிக்கமுடியும்?

முன்வினைப்பயன் என்பது ஒரு தவறான சித்தாந்தமாகும். மேலும் அனைத்து தவறான சித்தாந்தங்களைப் போன்றே இதுவும் தீமையானதாகும். வேதனை அடைபவர்களின் நிலையை இது அலட்சியப்படுத்துகிறது. அதிர்ஷ்ட மற்றவர்கள் அவர்களுக்கான பலனைப் பெறுகிறார்கள் என்று அது முன்னூகிக்கிறது.

தவறான நம்பிக்கைகள் எப்போதும் ஆபத்தானவை. ஒரு தத்துவம் சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தால், அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் என்றால் அது மிக உறுதியாக பொய்யானது. ஒரு தத்துவம் உண்மையா? பொய்யா? என்பதை அறிய இது அநேகமாய் ஒரு சிறந்த அளவு கோளாகும். உதாரணத்திற்கு, வெறுப்பு மற்றும் போரை ஊக்குவிக்கும் இஸ்லாம் போன்ற, ஒரு தத்துவம் பொய்யானதாகத்தான் இருக்க வேண்டும். முன்வினைப்பயன் தீண்டாமையையும் தாழ்ந்த குடியையும் ஊக்குவிக்கிறது.

உங்கள் கஷ்டங்கள் தெய்வீகமாக நியமிக்கப்பட்டதென்று நீங்கள் நம்பினால், வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக போராட வேண்டும் என்ற உங்களது அறிவாற்றல் தவறிப்போய்விடும். இந்தியாவின் முன்னேற்றத்தை முட்டுக்கட்டை செய்த மிகபெரும் கொள்ளை நோய் ஜாதீயமாகும்(casteism). இது முன்வினைப்பயன் என்ற தத்துவத்தின்மேல் நம்பிக்கை கொண்டதால் விளைந்தது.

நாம் இந்த உலகத்திற்கு தண்டனையை அனுபவிப்பதற்காகவோ ஒரு பாடம் கற்பதற்காகவோ அல்லது ஒரு முஸ்லீம் சொல்வது போல் சோதிக்கப்படுவதற்காகவோ வரவில்லை.  நம் ஆன்மா கடவுளின் ஒருபடைப்பு அல்ல. அது கடவுளின் ஒரு பகுதியாகும். அது உருவாக்கப்படவோ அல்லது களங்கப்படவோ இல்லை. தண்ணீரை மாசடைய செய்வதுபோல் அந்த ஆன்மாவையும் மாசடைய செய்யலாம். ஆனால் மிகவும் மோசமாக மாசுபட்ட தண்ணீரைக்கூட அதன் அசலான தூய்மை நிலைக்கு கொண்டு வர நம்மால் முடியும்.  நம் ஆன்மா விஷயத்திலும் இது உண்மை தான்.

கடவுளிடம் உள்ள அனைத்தும் நம்மிடம் உள்ளது. உங்கள் உடலைப்பற்றி சிந்திக்கவும். நீங்கள் சில 100 டிரில்லியன் உயிரணுக்களால்(cells) செய்யப்பட்டுள்ளீர்கள். ஒவ்வொரு செல்லிலும் உங்களைப் பற்றிய அனைத்தும் வரையப்பட்டுள்ளது. உங்களின் மொத்த வடிவும் ஒவ்வொரு செல்லிலும் கலந்துள்ளது. அதே போன்றே கடவுளின் அனைத்தும் ஒருவரில் கரைந்துள்ளது. ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளின் பிம்பமே.

கடவுள் அறிந்திருக்கின்ற அனைத்தையும் நாமும் அறிவோம். நாம் இந்த இயற்பியல் வடிவில் இருக்கும்போது அவை அனைத்தும் நமக்கு மறைக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கிறோம். காய்ந்த தரையில் இருக்கும் ஒரு தண்ணீர் மூலக்கூறை போல் நாம் இருக்கிறோம். மகா சமுத்திரத்திலிருந்து வந்த நமக்கு அது பற்றிய நினைவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் நாம் எப்போது நம் மூலத்தை அடைகிறோமோ, அப்போது நாம் அதுவாகவே ஆகிறோம். அப்போது அனைத்து அறிவும் நமக்கு நினைவு படுத்தப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நினைவுப்படுத்துவது என்பது, மற்ற அனைத்து ஆன்மாக்களோடும் ஐக்கியமாவது என்பதாகும். இந்த பிரபஞ்சத்தோடு அனைத்தும் ஒன்றே என்பதை மறு கண்டுபிடிப்பாக கண்டுபிடிப்பது போன்றதாகும்.

நாம் கற்றுக்கொள்வதற்காக இந்த உலகிற்கு வரவில்லை என்றால், பின் வந்த நோக்கம்தான் என்ன?

நாம் நமது இருப்பை(existence) அனுபவிக்கவே இங்கு வந்துள்ளோம். விஷயங்கள் அவற்றின் எதிர்பதத்தால் மட்டுமே அறியப்படுகிறது. ஈரத்தன்மையை அனுபவிக்க வறட்சி இருக்க வேண்டும். உயரத்தை அனுபவிக்க குள்ளம் இருக்கவேண்டும். வெளிச்சத்தை அனுபவிக்க இருள் அவசியம். எனவேதான் நாம் ஜீவாத்மாவை அனுபவிக்க கடவுள்(பூரண அறிவுநிலை மற்றும் பூரணஅறிவற்றநிலை) என்ற இந்த இரு துருவங்களைப் படைத்துள்ளார். இந்த உலகத்தில் உள்ள நூறு வருடத்தை நித்தியத்தோடு ஒப்பீடு செய்யும்போது அவை ஒன்றுமே இல்லை. அதுவே நமது உண்மையான வயதுதாகும்.

நாம் அதை அனுபவிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தால், ஏன் இவ்வளவு பாடுகள் இருக்கிறது?

நாம், நமது சவால்களை தேர்வு செய்கிறோம். ஆனால் அவற்றின் விவரங்களை விட்டுவிடுகிறோம். இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பொருள் உலகானது Heisenberg கின் நிச்சயமற்ற கோட்பாட்டுக்கு(uncertainty principle) உட்பட்டது. நம் மீது என்ன வாய்ப்பு எறியப்படுகிறதோ அதை எதிர்கொண்டு, வாழ்வின் சவால்களை சமாளித்து வாழ்வதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். நம் வாழ்வின் நோக்கம் பிரச்சனைகளை போராடி வென்று வாழ்கையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதாகும்.

எதையும் எளிதாக கொள்வதற்காக நாம் இங்கே வரவில்லை. நமது வீடு சொர்கத்தில் உள்ளது. அங்கே அனைத்தையும் நாம் நமது நினைவுகளால் கட்டமைத்துக் கொள்ளலாம். அங்கே அனைத்துமே எளிதானது.  நம்மை நாமே சவால் விடுவதற்காகவே, நாம் இங்கே வருவதற்கு முடிவெடுத்தோம்.

மறுஉலகைப் பற்றி பேசும் போதெல்லாம் உவமைகளை கொண்டு எளிதாக நாம் கையாள்கிறோம். இயேசு மிக அதிகமாக உவமைகளை பயன்படுத்தினார். நானும் ஒன்றை எய்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் மிக வசதியாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மென்மையான படுக்கையில் உறங்குகிறீர்கள். நீங்கள் விழிக்கும்போது வெந்நீர் குளியல். குளிசாதனப்பெட்டியில் இருந்து நீங்கள் விரும்புவதை எடுத்து உங்கள் அடுப்பில் சமைக்கிறீர்கள். அப்போது உங்கள் காபி சமைக்கும் இயந்திரம் உங்களுக்கு ஒரு அருமையான காபி காய்ச்சுகிறது.  உங்கள் காலை உணவு மேஜையில் உங்களுக்கு விருப்பமான புதிதான பழங்கள் இருக்கின்றன. வாழ்க்கை நன்றாக மற்றும் எளிதாக உள்ளது. ஆனால் நீங்கள் ஏதாவது கொஞ்சம் கிளர்சியை விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் ஒரு முகாமில் தங்க தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் வனப்பகுதிகளில் ஒரு கூடாரம் அமைக்கிறீர்கள். நீங்கள் தரையிலே, உறக்கப் பைகளில் தூங்குகிறீர்கள். கொசுக்கள் உங்களை கடித்து உயிரைவாங்கும்போதே காட்டாற்றின் குளிர்ந்த தண்ணீரிலே குளிக்கிறீர்கள்.  நீங்கள் கூடி,வேட்டையாடி அல்லது மீன்பிடித்து நெருப்பு உண்டாகி அதை சமைத்து சாப்பிடுகிறீர்கள்.

ஏன் உங்களது வாழ்க்கையை மிகவும் கடினமானதாக செய்கிறீர்கள்? மேலும் சிலர் இன்னும் அதிகமாக சென்று மலைமேல் ஏறுகிறார்கள். இரக்கமற்ற வெப்பநிலை மற்றும் நிலப்பகுதிகளில், தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். ஏன் சுகவாசியானஒருவர், இப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டும்.? அவர்கள் என்ன பைத்தியங்களா? சவால்கள் நமக்கு பிடிக்கும் என்பதால்தான். அதனால்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒருவர் மீன்பிடிக்க செல்வதை தேர்ந்தெடுப்பதைப்போல், வேறொருவர் எவரெஸ்ட் மலை ஏறுவதை தேர்ந்தெடுப்பதைப்போல். இந்த உலகத்தில் நாம் சந்திக்கப்போகும் சாவால்களின் தரத்தை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். பூவுலக வாழ்வு எனும் யோசனையே இப்படிப்பட்ட சாவால்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதே.

இது ஒரு உவமையாக உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு சுற்றுலாவோ அல்லது முகாமில் தங்குவது போன்றோ அல்ல. நம்முடைய வாழ்வில் ஒரு நோக்கம் இருக்கிறது. இராணுவ சேவை ஒருவேளை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கலாம். அவர்கள் இராணுவத்தில் அதன் துன்பங்களையும் மற்றும் ஆபத்துக்களையும் பற்றி அறிந்திருந்தாலும்கூட வீரர்கள் தானாகவே முன்வந்து இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் சேவையில் ஒரு நோக்கம் உள்ளது. நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இறுதியில் நாம் அதை கண்டுபிடிப்போம். நான்15 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பிறப்பின் நோக்கத்தை கண்டு கொண்டேன். 9 வயதில் மிக உயரத்தில் இருந்து நான் தவறி விழுந்தபோது மருத்துவர்கள் நான் பிழைப்பது மிக கடினம் என்று என் பெற்றோரிடம் கூறிவிட்டனர். அதில் தப்பிப்பிழைத்து மனித குலத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாம் பற்றிய உண்மைகளை கற்பிக்கவே இந்த உலகத்திற்கு நான் வந்தேன் என்றும் அதுவே என் பிறப்பின் நோக்கம் என்றும் நான் கண்டு கொண்டேன். 15 வருடத்திற்கு முன்புவரை நான் இதை அறிந்திருக்கவில்லை. அதன் பின்பும்கூட இஸ்லாமை இந்த உலகில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இப்போது நான் கடவுளைக் கண்டுகொண்டேன். என் வாழ்க்கையில் நடந்த என் தோல்விகள், வெற்றிகள் மேலும் என் துன்பங்கள் எல்லாம் இந்த பணிக்காக என்னை தயார் செய்ததை என்னால் இப்போது காணமுடிகிறது. 15 வருடங்களுக்கு முன் இந்த பாதையை நான் தேர்ந்தெடுத்தேன் என்று எண்ணினேன். இல்லை, நான் பிறப்பதிற்கு முன்பே நான் இதை தேர்ந்தெடுத்து விட்டேன்.

ஏன் இங்கு இருக்கிறார்கள் என்று சிலருக்கு தெரியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். மற்றவர்களும் அதை சந்தோசமானதாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதைத்தான் மற்றவர்கள் தவற விடுகிறார்கள். அவர்கள் ஏமாற்றி காயப்படுத்தி மற்றும் அக்கிரமமாய் நடக்கிறார்கள். சாகசம் முடிந்தவுடன் இந்த மக்கள் ஒரு முரட்டுத்தனமாக எழுப்புதல் அடைந்து, விட்டிற்கு திரும்ப அழைக்கப்படுவார்கள். நிச்சயமாக அங்கே அவர்களுக்கு தண்டனை கிடையாது. ஆனால் பச்சாதாபமும் வருத்தமும்(remorse) உண்டாகும். வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பை தவறவிட்டதிற்க்காய் அவர்கள் வருந்துவார்கள்.

மேலும் ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். இருட்டில் நீங்கள் ஒருவனை சந்தித்து, அவனை அடித்துக் கொன்று விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் உங்களை மிதித்ததற்க்காகவோ அல்லது நீங்கள் அவனை கொள்ளையடிக்கவோ ஏதோ ஒன்று. நீங்கள் யாரும் பார்க்கவில்லை என்று சந்தோசமாக உங்கள் வீட்டிற்கு ஓடி விடுகிறீர்கள். சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது. காவலர் உங்களிடம் யாரோ ஒருவர் உங்கள் அப்பாவை அடித்துக் கொன்றுவிட்டார் என்கிறார்கள். நீங்கள் இனி எப்போதும் சந்தோசமாக இருப்பீர்களா? உங்களுக்கான தண்டனையை நீங்களே தேடமாட்டீர்களா?

எவற்றையெல்லாம் நாம் மற்றவர்களுக்கு செய்தோமோ, அவற்றை நாம் நமக்கே செய்தோம். நாம் எப்போது இந்த உலகை விட்டு செல்கிறோமோ அப்போதுதான் நாம் இதை அறிகிறோம். மனசாட்சி இல்லாமல் மக்கள் இங்கே வாழ முடியும். மறுஉலகில் அது முடியாது.

ஒரு NDE அனுபவ குறிப்பில், ஒரு பெண் கூறுகிறார், சொர்கத்திற்க்குள் நுழையும் முன் அவர் இரண்டு வேறுவேறான நரக வாயிர்க்கதவுகளைக் காண்கிறார். முதலில் நெருப்பு எரிகின்ற இடத்தைக் காண்கிறார். அங்கே மிகக் தீமையான ஆன்மாக்கள் ( முஹம்மது மற்றும் ஹிட்லரைப் போன்றதாக நான் கருதுகிறேன்) தீயில் கருகுகின்றன. பின் அவர் அடுத்த வாயிர்க்கதவுக்கு கடந்து செல்கிறார். இது ஒரு பாழான தனித்து விடப்பட்ட இடம். அது சிவப்பு வானத்தையும் நீண்ட நிழல்களையும் கொண்டுள்ளது. தங்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்றுகூட அறிய முடியாத அளவிற்கு தங்கள் சுயநினைவுகளால் உறிஞ்சப்பட்ட மனிதர்களால் அந்த இடம் நிறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் முகங்கள் சோகத்தினாலும் வருத்தத்தினாலும் நிறைந்து இருந்தது. அவருக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது என்று அவர் கூறுவது என்னவென்றால், இந்த இரண்டு நரக வாயிர்க்கதவுகளும் மிகப்பெரியதாய், நரகத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாய் முழுவதும் திறந்து இருந்ததுதான். ஆனால் அங்கிருந்த எந்த ஆன்மாவும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை. தன் மொத்த வாழ்வையும் காண்பித்து விட்டு, சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதென்று மற்றொரு NDE நிகழ்வில் வேறொருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.  நான் சொர்கத்திற்கு செல்ல தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் நான் சொர்கத்திற்கு சொந்தமானவன் இல்லை என்று அறிந்திருந்தேன் என்கிறார்.

மறுஉலகைப் பற்றி நான் கற்றதில் இருந்தும் புரிந்துகொண்டதில் இருந்தும், நமது தண்டனையை நாமே தீர்மானிக்கிறோம் என்று அறிந்து கொண்டேன். அங்கே ஆன்மாக்கள் இங்கே நாம் பேசிக்கொள்வது போல் பேசுவதில்லை. ஒருவருக்கொருவர் அடுத்தவர்களின் மனதை வாசிக்கிறார்கள். ஆம், அங்கே அந்தரங்கம் இல்லை. நம் அனைவரின் நினைவுகளும் நம் அனைவரின் மொத்த வாழ்வும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இங்கே நாம் ஒரு கேவலமான குப்பைத் துண்டாக இருந்தாலும் நம் நினைவுகளை இங்கே மறைக்க முடியும். நாம் பரிசுத்தமானவன் போல் நடிக்க முடியும். அதற்கு அங்கே வாய்ப்பே இல்லை.

இதை நான் கற்றுக்கொண்டபின், நான் உணர்ந்தது என்னவென்றால் எல்லோரின் மனத்தையும் எல்லோரும் வாசிக்க முடியும் என்றால் இந்த உலகமும் ஒரு சொர்கமாக மாறிவிடும் என்பதாகும். இங்கே நாம் ஒருவரை சந்திக்கும்போது, அவர்களை சந்தித்ததால் பெருமகிழ்ச்சி அடைந்ததுபோல் ஒரு பொய்யான சிரிப்பை நம் முகத்தில் வைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் அடிமனதில் நாம் அவர்களின் தைரியத்தை வெறுத்து அவர்களை ஏமாற்றுகிறோம். எல்லோரும் எல்லோரின் மனதை அறிந்து கொள்ளமுடியும் என்றால், தீய சிந்தனை செய்ய ஒருவரும் துணிய மாட்டோம். ஒரு NDE கூறியது போல் சொர்க்ககுடியுரிமை கொண்டவர்கள் அனைவரும் அனைவரையும் அன்பு செய்கிறோம் என்று சொன்னது ஆச்சரியம் அல்ல. ஆனால் நிச்சயமாக உலக மக்கள் அனைவரும் அனைவரின் சிந்தையையும் காணமுடியும் என்கின்றபோது எப்படி பல்வேறு எண்ணங்கள் இருக்க முடியும்?

 

– அலிசினா(Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி(Antony)

 

நம்பிக்கையற்றவரின் விசுவாசம்

Posted on Updated on

சமய நம்பிக்கை, மற்றும் நம்பிக்கை இன்மை சூழ்நிலை சார்ந்தது. எவரும், எப்போதும் சமய நம்பிக்கையாளரகவோ,  எப்போதும் சமய நம்பிக்கை அற்றவராகவோ இருப்பதில்லை.  அனைவரும் எதோ ஒன்றின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கின்றனர். அந்த எதோ ஒன்று, மற்ற அனைத்தின் மீதும் அவர்களை நம்பிக்கை அற்றவராக மாற்றுகிறது. நீங்கள் ஏதாவதொரு மதத்தை விசுவாசித்தால், மற்ற மதங்களை விசுவசிக்கவில்லை. நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால், நீங்கள் நாத்தீகத்தை நம்பவில்லை. மேலும் நீங்கள் ஒரு நாத்தீகவாதி என்றால், ஆத்தீகத்தை நம்பவில்லை. இதில் தெளிவாக இருப்பது மிக முக்கியமானது. நம்பிக்கை சரி என்றோ, அல்லது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே சரி என்றோ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு மக்கள் கூட்டத்தை நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைப்பது நயவஞ்சகமானது. ஏனென்றால் அனைவருமே ஏதோ ஒன்றில் நம்பிக்கை அற்றவராகவும் வேறு ஏதோ ஒன்றில் நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கிறோம்.

இந்த கட்டுரையில் அந்த கூட்டம் மத நம்பிக்கை அற்றவர்கள் என்று, மத நம்பிக்கை கொண்டமக்கள் ஏளனமாக அழைக்கிறார்கள். நான் அந்த மத நம்பிக்கை அற்றவர்கள் அனைவரும்,  மத நம்பிக்கை கொண்டோரைப்போன்றே திடமான பற்றுடைய நம்பிக்கையாளர்கள் என்று வாதிடப்போகிறேன். ஆனால் அதற்குமுன், நம்பிக்கை என்றால் என்ன? என்றும் அதன் உடற்கூரையும் கற்றுக்கொள்வோம். கீழ்கண்ட வாக்கியமானது, Skeptic வலைத்தளத்தில் உள்ளது .  http://www.skepdic.com/faith.html

“விசுவாசம் என்பது சில கூற்றுகளில் ஒரு அறிவார்ந்த நம்பிக்கை அல்ல. எந்த ஒரு விசுவாசம் அதன் சாட்சியங்களின் தொகுப்போடு எதிரிடையாக இருக்கின்றதோ அது ஒரு அறிவற்ற நம்பிக்கையாகும்.”

விசுவாசம் குறித்து இது ஒரு நியாயமான வரையறை என்று நான் நினைக்கிறேன். பகுத்தறிவற்ற, மற்றும் நிரூபிக்க முடியாத கூற்றுகளின் மீதான நம்பிக்கையே விசுவாசித்தல் என்பதாகும். தர்க்கரீதியாகவோ அல்லது சாட்சியங்களின் மூலமாகவோ நாம் ஒரு கூற்றை நிரூபித்துவிட்டால் அதன்பின் விசுவாசம் என்பது தேவைப்படுவதில்லை. ஏனென்றால் அந்த கூற்று நிருபிக்கப்பட்டுவிட்டதால் அது அறிவாகும்.

சாட்சியங்களே இல்லாவிட்டாலும்கூட, பெரும்பாலான நமது அறிவு தர்க்கரீதியான அடித்தளம் கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள கருங்குழிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஐயன்ஸ்டீனின் பொதுசார்பியல் கொள்கை இந்த கருங்குழிகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று கூறுவதற்குமுன் ஒருவர்கூட கருங்குழிகள் பற்றி கேள்விப்படவில்லை. இன்றும்கூட கருங்குழிகளை நம்மால் காணமுடியவில்லை. ஆனால் அவைகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று நாம் அறிந்திருக்கிறோம். கருங்குழிகள் என்பது நமது விசுவாசத்தால் கட்டப்பட்டது அல்ல. அவைகள் கணித கணக்கீடுகளால் கட்டப்பட்டது. கணிதம் என்பது தர்க்கம் என்பதின் ஒரு பிரிவாகும். இதே செயல்முறை மூலமாகவே நாம் மாயபருப்பொருள்(Dark Matter), மாயசக்தி(Dark Energy), புழுத்துளைகள்(Worm Holes), பெருவெடிப்பு (Big Bang), மற்றும் இந்த பிரபஞ்சத்தின் வயது போன்றவற்றை அறிந்து கொள்கிறோம். இவை அனைத்திற்கும் எவ்விதமான சாட்சியங்களும் இல்லை. ஆனாலும் அவற்றை உறுதியாக சரி என்கிறோம். காரணம், நாம் நம் கணிதத்தை நம்புகிறோம். எனவே உண்மையை அறிந்து கொள்ள மற்றொரு வழி தர்க்கமாகும் (அது கணிதத்தின் ஒரு பகுதியாகும்).. சாட்சியம் ஒன்றுமே இல்லை என்பது ஒன்றுமே இல்லை என்பதற்கான சாட்சியம் இல்லை.

மற்றொரு வழி சாட்சியங்கள் மூலமாக………………அடிக்கடி காரியங்கள் நம் தர்க்கத்திற்கு எதிராக செல்வதை நாம் காண்கிறோம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் மூதாதேயர்களுக்கு விண்கற்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. விண்ணிலிருந்து கற்கள் விழுவது என்பதை உலகம் பற்றிய அவர்களது புரிதலில் பொருத்திப்பார்க்க இயலவில்லை. அவர்கள் அதை தெய்வீகமானது என்று கருதினார்கள். இது ஒரு சரியான பதில் இல்லை. அபத்தம் தான் என்றாலும் கூட, நம்மால் அந்த நிகழ்வை விளக்க முடியாது என்பதற்காக அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது அதைவிட அபத்தமானது.  நம்மால் புரிந்து கொள்ளமுடியாதவைகளை மருதலிப்பது அறிவுபூர்வமானதல்ல. ஏதாவது ஒன்றை பற்றி நம்முடைய புரிதலுக்கு இணக்கமற்று ஒரு சாட்சியம் நமக்கு கிடைத்தால்,  நம் புரிதலில் எங்கோ பிழை இருக்கிறது என்று அர்த்தம். இன்று விண்கற்களை ஏற்க நாம் தயங்குவதில்லை. காரணம், நாம் வானம் எவ்வாரானது என்று புரிந்து வைத்துள்ளோம்.

quantom-skierநம்மால் புரிந்துகொள்ள இயலாதைவைகளுக்கு குவாண்டம் இயற்பியல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு பார்வையாளர் ஒரு துகளை காணும்வரை மட்டுமே அந்த துகள் உண்டாயிருக்கிறது. எப்போது அதே பார்வையாளர் அந்த துகளைப் பார்ப்பதை நிறுத்தி விடுகிறாறோ அப்போது அந்த துகள் சூனியத்தில் மறைந்து விடுகிறது. அவைகளால் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடியும். அவைகள் இரண்டாய் பிளந்து இருவேறு வாயிர்க்கதவுவழியாய் சென்று மீதும் ஒன்றாய் ஒரே சமயத்தில் சேர்கின்றன. அவற்றைத் தனித்தனியாய்ப் பிரித்து, இந்த பிரபஞ்சத்தின் இரு வேறு எதிர் எதிர் எல்லையில் கொண்டு வைத்தாலும், ஒன்றை ஒன்று பிணைந்து கொண்டு அவைகளால் ஜோடியாய் இருக்க முடியும். அவைகளால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் எப்போது வேண்டுமானாலும் தோன்றி மறைய இயலும். மேலே சொன்ன எவையும் அறிவுப்பூர்வமாய் இல்லை. இருந்தாலும் ஒருவரும் அவற்றை மறுப்பதில்லை. தர்க்கபிழையாக இருந்தாலும்கூட நம்மால் அவதானிக்கக்கூடியவைகளாய் அவைகள் இருக்கின்றது.

எப்போது நம்மால் அவதானிக்கவோ அல்லது தர்க்கமாகவோ ஒன்று இல்லையோ அதுவே பிழையாகும். அதற்கு இங்கே ஒரு உதாரணம். இந்த Blog ல் தீர்க்கதரிசியின் அடிமை(slave of prophet) என்ற புனைப்பெயர்கொண்ட ஒருவர் இவ்வாறு எழுதினார். (அதை சுருக்கமாக தருகிறேன்) : “அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை கொண்ட, வெகுஜன கொலைகளை செய்த, கற்பழித்த மற்றும் பல குற்றங்களை செய்த என்னுடைய தீர்க்கதரிசியை குற்றப்படுத்துவதற்கு நீ யார்?” அல்லாவின் நம்பிக்கையாளர்களின் தர்க்கத்திற்கு தீர்க்கதரிசியின் அடிமை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. முகம்மதுவைபற்றி அறிவோம் என்ற என்னுடைய புத்தகத்தில், இவர்களின் பகுத்தறிவை விரிவாக விளக்கியுள்ளேன். ஒரு நம்பிக்கையாளர், உண்மை எனும் அளவுகோளால் தன் நம்பிக்கையை அளப்பதில்லை. மாறாக, உண்மையை தன் நம்பிக்கையால் அளக்கிறார்.

பெருமதிபிற்குரிய இமாம் கஜாலி(1058-1111)இவாறாக சொன்னார் : “எப்போது பொது அறிவின் கோரிக்கைகள் வெளிப்படுத்துதலோடு முரண்பாடுகிறதோ, அப்போது பொதுஅறிவு,  வெளிப்படுத்துதலோடு விட்டுக் கொடுக்கவேண்டும்”.  இதே போன்றதொறு கருத்தாய்வை Paul in 1 Cor. 1:20-25 கூறினார். அவர் சொல்வது என்னவென்றால், “கடவுளின் அறிவீனம் என்பது மனிதரின் ஞானத்தைவிட சிறந்தது”.  பவுலின் மேற்சொன்ன இந்த பகுதி தான் Tertullian கூற்றுக்கு அடித்தளம். Tertullian அந்த கூற்று “Credo quia absurdum” “அது அபத்தமானது, எனவே நான் அதைநம்புகிறேன்” .

(Tertullian

Carthaginian theologian who converted to Christianity (c. 193), broke with the Catholic Church (c. 207), and formed his own schismatic sect. His writings greatly influenced Western theology.)

DCC 5ல் அவர் இவ்வாறு கூறுகிறார் : “கடவுளின் மகன் இறந்துவிட்டார்; மனபூர்வமாக நாம் அதை நம்பவேண்டும், காரணம் அது ஒரு அபத்தம்(stupidity) ”

Fideism (Reliance on faith alone rather than scientific reasoning )

Fideism மானது, அபத்தத்தை விசுவசிப்பது என்பதை கொண்டு கட்டப்பட்டது. மேலும் எல்லா நம்பிக்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலையும் அதுவே தான்.

கண்ணை மூடிக்கொண்டு விசுவசிப்பது என்பது மத நம்பிக்கையுள்ள மக்களுக்கே ஆனது மட்டுமல்ல. தத்துவஞானி David Hume அவர்களின் இந்த பகுதியை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். யாராவது ஒருவர் இறந்த மனிதன், உயிரோடு வந்ததை நான் கண்டேன் என்று எப்போது என்னிடம் சொல்கிறாரோ, நான் உடனடியாக சிந்தித்து என்னிடமே வினவுவது என்னவென்றால்,” இந்த மனிதர் ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாந்துவிட்டாரா அல்லது அவர் சம்பந்தப்படுத்தி பார்க்கும் இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா?   நான் ஒரு அதிசயத்தை மற்றொரு அதிசயத்தின் மூலமா எடையிடுகிறேன். அவற்றின் மேன்மையைகொண்டு நான் அவற்றை கண்டுகொண்டு உச்சரிக்கிறேன். எப்போதும் நான் மேலான அதிசயத்தை நிராகரிக்கிறேன். அவரது சாட்சியத்தின் தவறான கூற்று, அவர் சம்பந்தப்படுத்திக் கூறுகின்ற ஒரு நிகழ்வைக் காட்டிலும் பெரிய அதிசயமாக இருக்கலாம். பின்போ அல்லது அதற்கு முன்வரையோ, அவர் என்னுடைய நம்பிக்கை அல்லது என் கருத்தைபற்றி கட்டளையிடுவது போல் நடிக்கலாமா?

Hume மற்றும் Al Ghazzali இருவரும் இருவேறு சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள். மேலும் அவர்களின் தளங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. மிக அருகில் சென்று நாம் கூர்ந்து நோக்கினால் இருவர் கூறுவதும் ஒன்றே என்பது நமக்கு வெளிப்படுகிறது. எந்த ஒரு விவாதம் அதிசயமானது போல் தோன்றுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று Hume சொல்கிறார். அதாவது, அந்த விவாதத்தை பகுத்தறிவால் விளக்க முடியாது என்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது நாம் குவாண்டம் இயந்திரவியலை நிராகரிக்கவேண்டும். குவாண்டம் இயந்திரவியலைவிட இயற்கைக்கு புறம்பான அதிசயமான ஒன்று வேறில்லை. ஆனாலும் நாம் அதை தவறவிடுவதில்லை. நமக்கு அவை புரிவதில்லை. காரணம், யதார்த்தம்(reality) எவ்வாறு இருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை.

மறுஉலக வாழ்வு எனும் தத்துவத்தை கணித ரீதியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அது இருக்கிறது என்பதற்கு அபரிமிதமான சாட்சியங்கள் இருக்கின்றன. ஏன், கடவுள் இருக்கிறார் என்றும், மறுஉலக வாழ்வு உண்டு என்றும்(இப்போது) நான் நம்புகிறேன் என்றால், NDE(Near Death Experience/இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) உண்மையானது. அது ஒரு கற்பனை அல்ல. அது ஒரு புறநிலையான ஒன்று என்பதற்கு நிறுபனமாக சரிபார்க்கப்படக்கூடிய நிகழ்வுகள் உள்ளன. அவற்றின் காணொளியை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

  • அறுவை சிகிச்சையின் போது மயக்கமாக இருந்த ஓர் பெண்மணி, அறுவை சிகிச்சை குழுவினர் என்னபேசினார்கள் என்றும், என்னவிதமான அறுவை சிகிச்சை கருவிகள் அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று துல்லியமாக விவரிக்கிறார்.
  • ஒரு குழந்தை இறந்து தன் சகோதரியை சந்திக்கிறது, …………(தன் தாய்க்கு தான் பிறக்கும் முன்பே ஒரு கரு கலைந்து விட்டதை யாரும் அந்த குழந்தைக்கு தெரிவிக்கவில்லை.)
  • ஒரு பெண் இறந்து மருத்துவமனை கட்டிடத்தை மிதந்து சுற்றி வருகிறாள். அவள் டென்னிஸ் விளையாட்டு காலனி ஒன்றை லேஜரில் காண்கிறாள். அந்த பெண் விவரித்தது போலவே, அதே இடத்தில் அந்த காலனிஇருந்தது.
  • ஒரு மாரடைப்பு நோயாளி மருத்துவமனைக்கு சுயநினைவற்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டார். அவர் தன் பொய்ப்பல்லை கழட்டி எடுத்த செவிலியப் பெண்ணையும், அவர் எங்கே அதை வைத்தார் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டார்.
  • பல அறுவை சிகிச்சை நிபுணர்கள், தங்களது நோயாளிகள் மருத்துவரீதியாக இறந்த நிலையில் அறுவை சிகிச்சைகுழு என்ன பேசினார்கள் என்று துல்லியமாக விவரித்தார்கள் என்று சாட்சி சொல்கின்றனர்.
  • ஒரு இரண்டு வயது பையன் போன பிறவியில் தான் ஒரு விமானி என்றும் தான் ஜப்பானியர்களால் கொல்லபட்டதாகவும் நினைவு கூறுகிறான். அவன் தன் கப்பலின் பெயரையும், தன் கடற்படை நண்பனின் பெயரையும் கூறுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர்கள், அவன் நண்பன் என்று சொன்ன 80 வயதில் இன்னும் உயிரோடிருக்கும் அவரையும் மற்றும் அவன் சொன்ன அனைத்தையும் சரி பார்கிறார்கள்.
  • ஒரு பிறவி குருடான பெண்மணி தான் NDE யின்போது முதல்முறையாக பார்த்ததாக கூறுகிறார்.
  • ஒரு அதிருப்தி ரஷிய விஞ்ஞானி KGB யால் கொலை செய்யபடுகிறார். அவர் தன் NDE யின்போது தன் நண்பனின் குழந்தையைக் கண்டு டெலிப்பதி(telepathy) மூலமாக உரையாடுகிறார். அவர் தன் நண்பனின் குழந்தைக்கு இடுப்பு உடைந்திருப்பதை அறிந்து கொள்கிறார். அவர் தான் உயிரோடு வந்தபின் இவற்றை தன் நண்பனுக்கு தெரியப்படுத்துகிறார். X –RAY அந்த குழந்தைக்கு எலும்பு முரிவு உள்ளதை காண்பித்தது.
  • ஒருபெண், தன்னை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின் மனதில் அவர் சொன்ன ஜெபத்தை கேட்கிறார். உயிரோடிருக்கும் அவரின் சகோதரிக்கு ஆவியாய் தோன்றி தான் குணமடைந்து விடவேண் என்று சொல்வதை தன் OBE யில் கண்டதாக விவரிக்கிறார்.

மருத்துவர்களிடருந்தும் நோயாளிகளிடமிருந்தும் வரும்  இவைகளும் இது போன்ற எண்ணற்ற பல அறிக்கைகளும், NDE என்பது உண்மைதான் என்பதற்கு அபரிமிதமான சாட்சியமாகும். மறுதலிப்பதின் மூலமாக நாம் இவற்றை தள்ளுபடி செய்யக்கூடாது.

ஆக்ஸிஜென் குறைபாட்டால் மூளையானது செழுமையான, கற்பனைக்கெட்டாத யதார்த்தமான அனுபவங்களை தருகிறது என்ற அபத்தமான தர்க்கத்தால் அவை ஒன்றையும் விளக்க முடியாது. கேலிக்கிடமான இந்த தத்துவத்தை, பரிணாமவளர்ச்சி வெளிச்சத்தினால் விளக்கவேண்டும். ஆதாரமற்ற இந்த தத்துவத்தை நாம் நம்பினாலும்கூட, மேலே கூறிய உண்மை யென சரிபார்க்கப்பட்ட நிகழ்வுகளை விளக்க அந்த தத்துவத்தால் இயலவில்லை. சரிபார்க்கப்பட்டது என்றால், இந்த அனுபவங்கள் எல்லாம் இறந்துகொண்டிருக்கும் மூளையின் பிரம்மைகள் அல்ல. அவைகளுக்கு சாட்சியாக மற்றவர்களும் இருக்கின்றனர்.

பொருள்முதல்வாதமும் (materialism), மற்ற மதங்களைப்போல் விசுவாசத்தின்மேல் கட்டப்பட்ட ஒரு மதம். சாட்சியங்களை நாம் வழங்கும்போது பொருள்முதல்வாதிகள் (materialists), மதவெறி பிடித்த அடிப்படைவாதிகள் போலவே அவற்றை திரித்து மறுதலிக்கிறார்கள்.  NDE என்ற நிகழ்வுகள் லட்சக்கணக்கில்(millions)  நடைபெறுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், நாத்தீகன், ஆத்திகன், அனைத்துவித இனம்,   மற்றும் கலாச்சாரங்கலிலும் உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இணையதளம் http://near-death.com/forum.html யில் NDE குறித்தான கதைகள் ஆயிரக்கணக்கான தொகுப்புகள் உள்ளது. நாம் அனைத்தையும் தள்ளுபடி செய்தாலும்கூட, சரிபார்க்கப்பட்டவற்றை நம்மால் நிராகரிக்க முடியாது. கூடுதலாக இறந்துகொண்டிருக்கும் ஒரு நபரின் சொந்தங்கள் அனுபவித்த NDE அனுபவங்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருகின்றன. Dr.Raymond Moody, தங்களின் அன்பு சொந்தங்களின் NDE யில் பங்குபெற்றதாக  கூறிய முந்நூற்றுக்கும் மேற்பட்ட  நபர்களின் பேட்டிகள் கண்டிருக்கிறார்.

குழந்தைகள், பெரியவர்கள், விசுவாசிகள், நாத்திகர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் ஒரு சதித்திட்டம் தீட்டுவதாக மறுதலிப்பவர்கள் சொல்லவில்லை என்றால், மணலில் நமது தலைகளை மறைத்து கொள்ளாமல், மாறாக அதை புரிந்து கொள்ள முயற்சிசெய்து,  NDE என்பது உண்மை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை இது ஒரு உருமாதிரிக்கான நேரமயிருக்கலாம்.  தர்க்கரீதியில் விவரிக்க முடியாத கடவுள் இருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டியதாகிவிடும் என்பதற்காக அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்கிறார்கள்.

ஏற்கனவே ஒன்றை முடிவு செய்தவர்கள் மனதில் எந்த உண்மையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விசுவாசம் என்பது ஒருமன நோய். விசுவாசம் குருடாக்குகிறது. ஒருவர் ஆத்திக விசுவாசியோ அல்லது நாத்திக விசுவாசியோ எதுவானாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு நம்பிக்கையின் தன்மைதான் ஒருவரை உண்மைகளை காணவிடாமல் தடுக்கிறதே தவிர, அந்த நம்பிக்கையின் உள்ளடக்கம் அல்ல.

ஒருவர் மற்றவர்களின் விசுவாத்தை கேள்வி கேட்பதினாலேயே நம்பிக்கை கொள்ளாதவராக ஆவதில்லை. ஆனால் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். தான் விசுவாசிக்கும் ஒன்றையே எவரால் கேள்வி கேட்கமுடிகிறதோ அவர்தான், நம்பிக்கை கொள்ளாதவர் என்பவர். இதுவே தீர்க்கதரிசிக்கும் ஞானம் அடைந்தவர்களுக்குமான தரக்குறியீடு.  குப்பனும், சுப்பனும், குமாரும், அந்தோனியும் நம்பிக்கை கொள்ளாதவர் ஆக முடியாது.  மற்ற மக்களின் விசுவாசத்தை மட்டுமே குறை சொல்கின்ற மனிதர்கள் அவர்கள் இகழ்ந்துரைகின்ற மத நம்பிக்கையாலரைப் போலவே அவரும் ஒரு விசுவாசியாவார்.

பிபிசி யினால் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம் NDE ஐயும் மனிதர்கள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றிய அருமையான குறும்படம்ஆகும் :

 

—- அலி சினா (Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி (Anthony)