நம்பிக்கையற்றவரின் விசுவாசம்

Posted on Updated on

சமய நம்பிக்கை, மற்றும் நம்பிக்கை இன்மை சூழ்நிலை சார்ந்தது. எவரும், எப்போதும் சமய நம்பிக்கையாளரகவோ,  எப்போதும் சமய நம்பிக்கை அற்றவராகவோ இருப்பதில்லை.  அனைவரும் எதோ ஒன்றின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கின்றனர். அந்த எதோ ஒன்று, மற்ற அனைத்தின் மீதும் அவர்களை நம்பிக்கை அற்றவராக மாற்றுகிறது. நீங்கள் ஏதாவதொரு மதத்தை விசுவாசித்தால், மற்ற மதங்களை விசுவசிக்கவில்லை. நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால், நீங்கள் நாத்தீகத்தை நம்பவில்லை. மேலும் நீங்கள் ஒரு நாத்தீகவாதி என்றால், ஆத்தீகத்தை நம்பவில்லை. இதில் தெளிவாக இருப்பது மிக முக்கியமானது. நம்பிக்கை சரி என்றோ, அல்லது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே சரி என்றோ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு மக்கள் கூட்டத்தை நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைப்பது நயவஞ்சகமானது. ஏனென்றால் அனைவருமே ஏதோ ஒன்றில் நம்பிக்கை அற்றவராகவும் வேறு ஏதோ ஒன்றில் நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கிறோம்.

இந்த கட்டுரையில் அந்த கூட்டம் மத நம்பிக்கை அற்றவர்கள் என்று, மத நம்பிக்கை கொண்டமக்கள் ஏளனமாக அழைக்கிறார்கள். நான் அந்த மத நம்பிக்கை அற்றவர்கள் அனைவரும்,  மத நம்பிக்கை கொண்டோரைப்போன்றே திடமான பற்றுடைய நம்பிக்கையாளர்கள் என்று வாதிடப்போகிறேன். ஆனால் அதற்குமுன், நம்பிக்கை என்றால் என்ன? என்றும் அதன் உடற்கூரையும் கற்றுக்கொள்வோம். கீழ்கண்ட வாக்கியமானது, Skeptic வலைத்தளத்தில் உள்ளது .  http://www.skepdic.com/faith.html

“விசுவாசம் என்பது சில கூற்றுகளில் ஒரு அறிவார்ந்த நம்பிக்கை அல்ல. எந்த ஒரு விசுவாசம் அதன் சாட்சியங்களின் தொகுப்போடு எதிரிடையாக இருக்கின்றதோ அது ஒரு அறிவற்ற நம்பிக்கையாகும்.”

விசுவாசம் குறித்து இது ஒரு நியாயமான வரையறை என்று நான் நினைக்கிறேன். பகுத்தறிவற்ற, மற்றும் நிரூபிக்க முடியாத கூற்றுகளின் மீதான நம்பிக்கையே விசுவாசித்தல் என்பதாகும். தர்க்கரீதியாகவோ அல்லது சாட்சியங்களின் மூலமாகவோ நாம் ஒரு கூற்றை நிரூபித்துவிட்டால் அதன்பின் விசுவாசம் என்பது தேவைப்படுவதில்லை. ஏனென்றால் அந்த கூற்று நிருபிக்கப்பட்டுவிட்டதால் அது அறிவாகும்.

சாட்சியங்களே இல்லாவிட்டாலும்கூட, பெரும்பாலான நமது அறிவு தர்க்கரீதியான அடித்தளம் கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள கருங்குழிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஐயன்ஸ்டீனின் பொதுசார்பியல் கொள்கை இந்த கருங்குழிகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று கூறுவதற்குமுன் ஒருவர்கூட கருங்குழிகள் பற்றி கேள்விப்படவில்லை. இன்றும்கூட கருங்குழிகளை நம்மால் காணமுடியவில்லை. ஆனால் அவைகள்(பிரபஞ்சவெளியில்) இருக்கின்றன என்று நாம் அறிந்திருக்கிறோம். கருங்குழிகள் என்பது நமது விசுவாசத்தால் கட்டப்பட்டது அல்ல. அவைகள் கணித கணக்கீடுகளால் கட்டப்பட்டது. கணிதம் என்பது தர்க்கம் என்பதின் ஒரு பிரிவாகும். இதே செயல்முறை மூலமாகவே நாம் மாயபருப்பொருள்(Dark Matter), மாயசக்தி(Dark Energy), புழுத்துளைகள்(Worm Holes), பெருவெடிப்பு (Big Bang), மற்றும் இந்த பிரபஞ்சத்தின் வயது போன்றவற்றை அறிந்து கொள்கிறோம். இவை அனைத்திற்கும் எவ்விதமான சாட்சியங்களும் இல்லை. ஆனாலும் அவற்றை உறுதியாக சரி என்கிறோம். காரணம், நாம் நம் கணிதத்தை நம்புகிறோம். எனவே உண்மையை அறிந்து கொள்ள மற்றொரு வழி தர்க்கமாகும் (அது கணிதத்தின் ஒரு பகுதியாகும்).. சாட்சியம் ஒன்றுமே இல்லை என்பது ஒன்றுமே இல்லை என்பதற்கான சாட்சியம் இல்லை.

மற்றொரு வழி சாட்சியங்கள் மூலமாக………………அடிக்கடி காரியங்கள் நம் தர்க்கத்திற்கு எதிராக செல்வதை நாம் காண்கிறோம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் மூதாதேயர்களுக்கு விண்கற்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. விண்ணிலிருந்து கற்கள் விழுவது என்பதை உலகம் பற்றிய அவர்களது புரிதலில் பொருத்திப்பார்க்க இயலவில்லை. அவர்கள் அதை தெய்வீகமானது என்று கருதினார்கள். இது ஒரு சரியான பதில் இல்லை. அபத்தம் தான் என்றாலும் கூட, நம்மால் அந்த நிகழ்வை விளக்க முடியாது என்பதற்காக அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது அதைவிட அபத்தமானது.  நம்மால் புரிந்து கொள்ளமுடியாதவைகளை மருதலிப்பது அறிவுபூர்வமானதல்ல. ஏதாவது ஒன்றை பற்றி நம்முடைய புரிதலுக்கு இணக்கமற்று ஒரு சாட்சியம் நமக்கு கிடைத்தால்,  நம் புரிதலில் எங்கோ பிழை இருக்கிறது என்று அர்த்தம். இன்று விண்கற்களை ஏற்க நாம் தயங்குவதில்லை. காரணம், நாம் வானம் எவ்வாரானது என்று புரிந்து வைத்துள்ளோம்.

quantom-skierநம்மால் புரிந்துகொள்ள இயலாதைவைகளுக்கு குவாண்டம் இயற்பியல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு பார்வையாளர் ஒரு துகளை காணும்வரை மட்டுமே அந்த துகள் உண்டாயிருக்கிறது. எப்போது அதே பார்வையாளர் அந்த துகளைப் பார்ப்பதை நிறுத்தி விடுகிறாறோ அப்போது அந்த துகள் சூனியத்தில் மறைந்து விடுகிறது. அவைகளால் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடியும். அவைகள் இரண்டாய் பிளந்து இருவேறு வாயிர்க்கதவுவழியாய் சென்று மீதும் ஒன்றாய் ஒரே சமயத்தில் சேர்கின்றன. அவற்றைத் தனித்தனியாய்ப் பிரித்து, இந்த பிரபஞ்சத்தின் இரு வேறு எதிர் எதிர் எல்லையில் கொண்டு வைத்தாலும், ஒன்றை ஒன்று பிணைந்து கொண்டு அவைகளால் ஜோடியாய் இருக்க முடியும். அவைகளால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் எப்போது வேண்டுமானாலும் தோன்றி மறைய இயலும். மேலே சொன்ன எவையும் அறிவுப்பூர்வமாய் இல்லை. இருந்தாலும் ஒருவரும் அவற்றை மறுப்பதில்லை. தர்க்கபிழையாக இருந்தாலும்கூட நம்மால் அவதானிக்கக்கூடியவைகளாய் அவைகள் இருக்கின்றது.

எப்போது நம்மால் அவதானிக்கவோ அல்லது தர்க்கமாகவோ ஒன்று இல்லையோ அதுவே பிழையாகும். அதற்கு இங்கே ஒரு உதாரணம். இந்த Blog ல் தீர்க்கதரிசியின் அடிமை(slave of prophet) என்ற புனைப்பெயர்கொண்ட ஒருவர் இவ்வாறு எழுதினார். (அதை சுருக்கமாக தருகிறேன்) : “அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை கொண்ட, வெகுஜன கொலைகளை செய்த, கற்பழித்த மற்றும் பல குற்றங்களை செய்த என்னுடைய தீர்க்கதரிசியை குற்றப்படுத்துவதற்கு நீ யார்?” அல்லாவின் நம்பிக்கையாளர்களின் தர்க்கத்திற்கு தீர்க்கதரிசியின் அடிமை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. முகம்மதுவைபற்றி அறிவோம் என்ற என்னுடைய புத்தகத்தில், இவர்களின் பகுத்தறிவை விரிவாக விளக்கியுள்ளேன். ஒரு நம்பிக்கையாளர், உண்மை எனும் அளவுகோளால் தன் நம்பிக்கையை அளப்பதில்லை. மாறாக, உண்மையை தன் நம்பிக்கையால் அளக்கிறார்.

பெருமதிபிற்குரிய இமாம் கஜாலி(1058-1111)இவாறாக சொன்னார் : “எப்போது பொது அறிவின் கோரிக்கைகள் வெளிப்படுத்துதலோடு முரண்பாடுகிறதோ, அப்போது பொதுஅறிவு,  வெளிப்படுத்துதலோடு விட்டுக் கொடுக்கவேண்டும்”.  இதே போன்றதொறு கருத்தாய்வை Paul in 1 Cor. 1:20-25 கூறினார். அவர் சொல்வது என்னவென்றால், “கடவுளின் அறிவீனம் என்பது மனிதரின் ஞானத்தைவிட சிறந்தது”.  பவுலின் மேற்சொன்ன இந்த பகுதி தான் Tertullian கூற்றுக்கு அடித்தளம். Tertullian அந்த கூற்று “Credo quia absurdum” “அது அபத்தமானது, எனவே நான் அதைநம்புகிறேன்” .

(Tertullian

Carthaginian theologian who converted to Christianity (c. 193), broke with the Catholic Church (c. 207), and formed his own schismatic sect. His writings greatly influenced Western theology.)

DCC 5ல் அவர் இவ்வாறு கூறுகிறார் : “கடவுளின் மகன் இறந்துவிட்டார்; மனபூர்வமாக நாம் அதை நம்பவேண்டும், காரணம் அது ஒரு அபத்தம்(stupidity) ”

Fideism (Reliance on faith alone rather than scientific reasoning )

Fideism மானது, அபத்தத்தை விசுவசிப்பது என்பதை கொண்டு கட்டப்பட்டது. மேலும் எல்லா நம்பிக்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலையும் அதுவே தான்.

கண்ணை மூடிக்கொண்டு விசுவசிப்பது என்பது மத நம்பிக்கையுள்ள மக்களுக்கே ஆனது மட்டுமல்ல. தத்துவஞானி David Hume அவர்களின் இந்த பகுதியை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். யாராவது ஒருவர் இறந்த மனிதன், உயிரோடு வந்ததை நான் கண்டேன் என்று எப்போது என்னிடம் சொல்கிறாரோ, நான் உடனடியாக சிந்தித்து என்னிடமே வினவுவது என்னவென்றால்,” இந்த மனிதர் ஏமாற்றுகிறாரா அல்லது ஏமாந்துவிட்டாரா அல்லது அவர் சம்பந்தப்படுத்தி பார்க்கும் இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா?   நான் ஒரு அதிசயத்தை மற்றொரு அதிசயத்தின் மூலமா எடையிடுகிறேன். அவற்றின் மேன்மையைகொண்டு நான் அவற்றை கண்டுகொண்டு உச்சரிக்கிறேன். எப்போதும் நான் மேலான அதிசயத்தை நிராகரிக்கிறேன். அவரது சாட்சியத்தின் தவறான கூற்று, அவர் சம்பந்தப்படுத்திக் கூறுகின்ற ஒரு நிகழ்வைக் காட்டிலும் பெரிய அதிசயமாக இருக்கலாம். பின்போ அல்லது அதற்கு முன்வரையோ, அவர் என்னுடைய நம்பிக்கை அல்லது என் கருத்தைபற்றி கட்டளையிடுவது போல் நடிக்கலாமா?

Hume மற்றும் Al Ghazzali இருவரும் இருவேறு சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள். மேலும் அவர்களின் தளங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. மிக அருகில் சென்று நாம் கூர்ந்து நோக்கினால் இருவர் கூறுவதும் ஒன்றே என்பது நமக்கு வெளிப்படுகிறது. எந்த ஒரு விவாதம் அதிசயமானது போல் தோன்றுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று Hume சொல்கிறார். அதாவது, அந்த விவாதத்தை பகுத்தறிவால் விளக்க முடியாது என்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது நாம் குவாண்டம் இயந்திரவியலை நிராகரிக்கவேண்டும். குவாண்டம் இயந்திரவியலைவிட இயற்கைக்கு புறம்பான அதிசயமான ஒன்று வேறில்லை. ஆனாலும் நாம் அதை தவறவிடுவதில்லை. நமக்கு அவை புரிவதில்லை. காரணம், யதார்த்தம்(reality) எவ்வாறு இருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை.

மறுஉலக வாழ்வு எனும் தத்துவத்தை கணித ரீதியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அது இருக்கிறது என்பதற்கு அபரிமிதமான சாட்சியங்கள் இருக்கின்றன. ஏன், கடவுள் இருக்கிறார் என்றும், மறுஉலக வாழ்வு உண்டு என்றும்(இப்போது) நான் நம்புகிறேன் என்றால், NDE(Near Death Experience/இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) உண்மையானது. அது ஒரு கற்பனை அல்ல. அது ஒரு புறநிலையான ஒன்று என்பதற்கு நிறுபனமாக சரிபார்க்கப்படக்கூடிய நிகழ்வுகள் உள்ளன. அவற்றின் காணொளியை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

  • அறுவை சிகிச்சையின் போது மயக்கமாக இருந்த ஓர் பெண்மணி, அறுவை சிகிச்சை குழுவினர் என்னபேசினார்கள் என்றும், என்னவிதமான அறுவை சிகிச்சை கருவிகள் அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று துல்லியமாக விவரிக்கிறார்.
  • ஒரு குழந்தை இறந்து தன் சகோதரியை சந்திக்கிறது, …………(தன் தாய்க்கு தான் பிறக்கும் முன்பே ஒரு கரு கலைந்து விட்டதை யாரும் அந்த குழந்தைக்கு தெரிவிக்கவில்லை.)
  • ஒரு பெண் இறந்து மருத்துவமனை கட்டிடத்தை மிதந்து சுற்றி வருகிறாள். அவள் டென்னிஸ் விளையாட்டு காலனி ஒன்றை லேஜரில் காண்கிறாள். அந்த பெண் விவரித்தது போலவே, அதே இடத்தில் அந்த காலனிஇருந்தது.
  • ஒரு மாரடைப்பு நோயாளி மருத்துவமனைக்கு சுயநினைவற்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டார். அவர் தன் பொய்ப்பல்லை கழட்டி எடுத்த செவிலியப் பெண்ணையும், அவர் எங்கே அதை வைத்தார் என்பதையும் அடையாளம் கண்டு கொண்டார்.
  • பல அறுவை சிகிச்சை நிபுணர்கள், தங்களது நோயாளிகள் மருத்துவரீதியாக இறந்த நிலையில் அறுவை சிகிச்சைகுழு என்ன பேசினார்கள் என்று துல்லியமாக விவரித்தார்கள் என்று சாட்சி சொல்கின்றனர்.
  • ஒரு இரண்டு வயது பையன் போன பிறவியில் தான் ஒரு விமானி என்றும் தான் ஜப்பானியர்களால் கொல்லபட்டதாகவும் நினைவு கூறுகிறான். அவன் தன் கப்பலின் பெயரையும், தன் கடற்படை நண்பனின் பெயரையும் கூறுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர்கள், அவன் நண்பன் என்று சொன்ன 80 வயதில் இன்னும் உயிரோடிருக்கும் அவரையும் மற்றும் அவன் சொன்ன அனைத்தையும் சரி பார்கிறார்கள்.
  • ஒரு பிறவி குருடான பெண்மணி தான் NDE யின்போது முதல்முறையாக பார்த்ததாக கூறுகிறார்.
  • ஒரு அதிருப்தி ரஷிய விஞ்ஞானி KGB யால் கொலை செய்யபடுகிறார். அவர் தன் NDE யின்போது தன் நண்பனின் குழந்தையைக் கண்டு டெலிப்பதி(telepathy) மூலமாக உரையாடுகிறார். அவர் தன் நண்பனின் குழந்தைக்கு இடுப்பு உடைந்திருப்பதை அறிந்து கொள்கிறார். அவர் தான் உயிரோடு வந்தபின் இவற்றை தன் நண்பனுக்கு தெரியப்படுத்துகிறார். X –RAY அந்த குழந்தைக்கு எலும்பு முரிவு உள்ளதை காண்பித்தது.
  • ஒருபெண், தன்னை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின் மனதில் அவர் சொன்ன ஜெபத்தை கேட்கிறார். உயிரோடிருக்கும் அவரின் சகோதரிக்கு ஆவியாய் தோன்றி தான் குணமடைந்து விடவேண் என்று சொல்வதை தன் OBE யில் கண்டதாக விவரிக்கிறார்.

மருத்துவர்களிடருந்தும் நோயாளிகளிடமிருந்தும் வரும்  இவைகளும் இது போன்ற எண்ணற்ற பல அறிக்கைகளும், NDE என்பது உண்மைதான் என்பதற்கு அபரிமிதமான சாட்சியமாகும். மறுதலிப்பதின் மூலமாக நாம் இவற்றை தள்ளுபடி செய்யக்கூடாது.

ஆக்ஸிஜென் குறைபாட்டால் மூளையானது செழுமையான, கற்பனைக்கெட்டாத யதார்த்தமான அனுபவங்களை தருகிறது என்ற அபத்தமான தர்க்கத்தால் அவை ஒன்றையும் விளக்க முடியாது. கேலிக்கிடமான இந்த தத்துவத்தை, பரிணாமவளர்ச்சி வெளிச்சத்தினால் விளக்கவேண்டும். ஆதாரமற்ற இந்த தத்துவத்தை நாம் நம்பினாலும்கூட, மேலே கூறிய உண்மை யென சரிபார்க்கப்பட்ட நிகழ்வுகளை விளக்க அந்த தத்துவத்தால் இயலவில்லை. சரிபார்க்கப்பட்டது என்றால், இந்த அனுபவங்கள் எல்லாம் இறந்துகொண்டிருக்கும் மூளையின் பிரம்மைகள் அல்ல. அவைகளுக்கு சாட்சியாக மற்றவர்களும் இருக்கின்றனர்.

பொருள்முதல்வாதமும் (materialism), மற்ற மதங்களைப்போல் விசுவாசத்தின்மேல் கட்டப்பட்ட ஒரு மதம். சாட்சியங்களை நாம் வழங்கும்போது பொருள்முதல்வாதிகள் (materialists), மதவெறி பிடித்த அடிப்படைவாதிகள் போலவே அவற்றை திரித்து மறுதலிக்கிறார்கள்.  NDE என்ற நிகழ்வுகள் லட்சக்கணக்கில்(millions)  நடைபெறுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், நாத்தீகன், ஆத்திகன், அனைத்துவித இனம்,   மற்றும் கலாச்சாரங்கலிலும் உள்ளவர்களால் சொல்லப்படுகிறது. இணையதளம் http://near-death.com/forum.html யில் NDE குறித்தான கதைகள் ஆயிரக்கணக்கான தொகுப்புகள் உள்ளது. நாம் அனைத்தையும் தள்ளுபடி செய்தாலும்கூட, சரிபார்க்கப்பட்டவற்றை நம்மால் நிராகரிக்க முடியாது. கூடுதலாக இறந்துகொண்டிருக்கும் ஒரு நபரின் சொந்தங்கள் அனுபவித்த NDE அனுபவங்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருகின்றன. Dr.Raymond Moody, தங்களின் அன்பு சொந்தங்களின் NDE யில் பங்குபெற்றதாக  கூறிய முந்நூற்றுக்கும் மேற்பட்ட  நபர்களின் பேட்டிகள் கண்டிருக்கிறார்.

குழந்தைகள், பெரியவர்கள், விசுவாசிகள், நாத்திகர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் ஒரு சதித்திட்டம் தீட்டுவதாக மறுதலிப்பவர்கள் சொல்லவில்லை என்றால், மணலில் நமது தலைகளை மறைத்து கொள்ளாமல், மாறாக அதை புரிந்து கொள்ள முயற்சிசெய்து,  NDE என்பது உண்மை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை இது ஒரு உருமாதிரிக்கான நேரமயிருக்கலாம்.  தர்க்கரீதியில் விவரிக்க முடியாத கடவுள் இருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டியதாகிவிடும் என்பதற்காக அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்கிறார்கள்.

ஏற்கனவே ஒன்றை முடிவு செய்தவர்கள் மனதில் எந்த உண்மையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விசுவாசம் என்பது ஒருமன நோய். விசுவாசம் குருடாக்குகிறது. ஒருவர் ஆத்திக விசுவாசியோ அல்லது நாத்திக விசுவாசியோ எதுவானாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு நம்பிக்கையின் தன்மைதான் ஒருவரை உண்மைகளை காணவிடாமல் தடுக்கிறதே தவிர, அந்த நம்பிக்கையின் உள்ளடக்கம் அல்ல.

ஒருவர் மற்றவர்களின் விசுவாத்தை கேள்வி கேட்பதினாலேயே நம்பிக்கை கொள்ளாதவராக ஆவதில்லை. ஆனால் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். தான் விசுவாசிக்கும் ஒன்றையே எவரால் கேள்வி கேட்கமுடிகிறதோ அவர்தான், நம்பிக்கை கொள்ளாதவர் என்பவர். இதுவே தீர்க்கதரிசிக்கும் ஞானம் அடைந்தவர்களுக்குமான தரக்குறியீடு.  குப்பனும், சுப்பனும், குமாரும், அந்தோனியும் நம்பிக்கை கொள்ளாதவர் ஆக முடியாது.  மற்ற மக்களின் விசுவாசத்தை மட்டுமே குறை சொல்கின்ற மனிதர்கள் அவர்கள் இகழ்ந்துரைகின்ற மத நம்பிக்கையாலரைப் போலவே அவரும் ஒரு விசுவாசியாவார்.

பிபிசி யினால் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம் NDE ஐயும் மனிதர்கள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றிய அருமையான குறும்படம்ஆகும் :

 

—- அலி சினா (Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி (Anthony)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s