மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 2

Posted on Updated on

ajmal-qadri

மௌலானா  அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு இரண்டாவது மின்னஞ்சல் – பாகம் 2

17/11/2007

மௌலானா அஜ்மல் காத்ரி  

திரு அலி,

முதலில் நான் வேண்டிக்கொள்ள விரும்புவது, முஹம்மது நபியை (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தியும் ஆசியும் உண்டாகட்டும்) பற்றி அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை  நிறுத்துங்கள்  என்பதுதான்… நீங்கள் மனிதத்தை மதிப்பதாக இருந்தால், நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணர்வுகளுக்கு  நீங்கள் மதிப்பும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்.

அன்பார்ந்த மௌலானா,

நான் முஹம்மதுவை அவமதிக்கவில்லை. நான் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை வைக்கிறேன். முஹம்மது திருடராகவும், வெகுஜன படுகொலைகாரராகவும், கற்பழிப்பவராகவும் இருந்தார் என்று நான் கூறினால், நான்  ஹதீத், சீறா  மற்றும் குர்ஆனை ஆதாரங்களாக பயன்படுத்தி என்னுடைய உரிமைகோரல்களை   நிரூபிக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகளை  பொய்யென்று நிரூபிப்பது உங்களை சார்ந்தது.

நம்பிக்கைகள் என்பதைப்பற்றி சொல்வதென்றால், நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று யார் சொன்னது? நம்பிக்கை கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள்(நஜீஸ்);  அவர்களை சிலுவையில் அறையுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளை வெட்டுங்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய எதிரிகள், அவர்கள் நரகத்தின் எரிபொருள் ஆவார்கள் என்று கூறுகிற ஒரு மதத்தை எவரும் ஏன் மதிக்க வேண்டும்? நான் நம்பிக்கை கொள்ளாவதன் என்பதால் இது எனக்கு அவமரியாதை. எனக்கு எதிரான ஒரு அவமரியாதையை நான் ஏன் மதிக்க வேண்டும்?

மனிதர்களுடைய நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். அது மடத்தனமானது. எந்த நம்பிக்கையையும், நம்முடைய சொந்த நம்பிக்கையையும் கூட நாம் மதிக்க வேண்டியதில்லை. நாம் எப்பொழுதுமே நம்பிக்கைகளை குறித்து கேள்வி கேட்க வேண்டும். மனிதர்கள் வளர்ச்சி அடைவதற்கு இது ஒன்றே வழி. நாம் நம்பிக்கைகளை மதித்து, அவைகளை குறித்து கேள்வி கேட்கவில்லை என்றால், அவைகளுக்கு சவால் விடவில்லை என்றால், பொய்யான நம்பிக்கைகளை நாம் எப்படி விட்டொழிக்கப் போகிறோம்?

மேலும், மற்றவர்களுடைய நம்பிக்கைகளை முஸ்லிம்கள் மதிக்கிறார்களா? அவர்கள் எங்கெல்லாம் பெருவாரியாக இருந்து அவர்களுடைய கை ஓங்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பது, பஹாய்களையும்(Bahais) சீக்கியர்களையும் அஹ்மதிகளையும் ஹிந்துக்களையும் கொலை செய்வது என்பது ஏன்? முஸ்லிம்கள் தினந்தோறும் ஓதுகின்ற சூரா பாத்திஹா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவமரியாதை இல்லையா? முஸ்லிம்களை மறந்து விடுங்கள். முஹம்மது அவருடைய காலத்து மக்களின் நம்பிக்கையை மதித்தாரா? அவர் கஅபாவை உடைத்து உட்புகுந்து அந்த கோயிலை ஏன் அழித்தார்? அது அரபுகளுடைய மதத்தின் புனிதத்தை மிக அவமரியாதை படுத்தியது இல்லையா? அவர் தன்னுடைய பள்ளிவாசலை வேறு எங்காவது ஆரம்பித்து இருக்க முடியும். ஏன்  அவர் மக்களின் தெய்வங்களை தாக்கி அவமரியாதை படுத்த வேண்டும்? மற்ற முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை அவர் ஏற்படுத்தினார். விளைவாக, அவர் இருந்ததை போலவே, அவரை பின்பற்றுபவர்களும் துஷ்டர்களாகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகிறார்கள்; மதத்திலிருந்து வழி தவறியவர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறுகிறார்கள்; ஒருவரை ஒருவர் கொலை செய்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் கைகளில் போர்களில் கொல்லப்பட்டதைவிட அதிகமாக, சொந்த மதப்பிரிவு சண்டைகளில், சொந்த முஸ்லிம்களின் கைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கொல்லுதல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்களுடைய நம்பிக்கையை மதிக்கும்படி மற்றவர்களை நீங்கள் கேட்டுக்கொள்ளும்போது, மற்றவர்களுடைய நம்பிக்கைகளை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதை தயவுகூர்ந்து ஆழ்ந்து பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் மற்ற மதங்களுக்கு வழங்குவதைக் காட்டிலும் மிக அதிகமான சுதந்திரத்தையும் உரிமைகளையும் முஸ்லிமல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள். ஷரியத்தை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட வேண்டும் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். மனிதர்களுடைய நம்பிக்கையை இப்படிதான் நீங்கள் மதிக்கிறீர்களா? நீங்கள் ஒரு மரியாதையையும் கொடுக்காதபோது, நீங்கள் மட்டும் மரியாதையை கேட்கிறீர்கள்.

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் இறுதியான, வல்லமையான தூதர். சரியானது, தவறானது என்பதை குறித்து தீர்ப்பளிப்பதற்கு  குர்ஆனே அளவுகோல்(புர்கான்). குர்ஆனால் வழங்கப்படும் நம்பிக்கை(ஈமான்) எனும் அளவுகோல் எதுவானாலும் அது இறுதித்தூதரின் உம்மதிற்கே(சமுதாயம்) கொடுக்கப்படுகிறது என்பதை குறித்து உங்களுடைய மனதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நல்லது, நான் அதை சந்தேகிக்கிறேன். அதனால்தான் இந்த உரிமைகோரலை தர்க்கப்பூர்வமான வழியில் நிரூபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு கூறுவதினாலேயே நான் நம்பிவிட மாட்டேன்.  அந்த உரிமைகோரல்களுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? மேலும் முஹம்மது அவ்வாறு கூறுவதினாலேயும் நான் நம்பிவிட மாட்டேன். எனக்கு ஆதாரம் தேவை. முஸ்லிம்கள் ஆதாரத்தை உரிமைகோரலோடு போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். எந்த ஆதாரத்தையும் கொடுப்பதிற்கு பதிலாக, ஒரு பொய்யை அடித்துக் கூறினால் அது உண்மை ஆகிவிடும் என்பதைப்போல, அவர்கள் உரிமைகோரலையே  திருப்பித் திருப்பி கூறுகிறார்கள்.

நான் உங்களுடன் தர்க்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட மாட்டேன். ஏனெனில், சுத்தமான தர்க்க அறிவு(pure logic) உங்களை சந்தேகவாதத்தையோ (Agnotism) அல்லது நாத்திகத்தையோ நோக்கி வழிநடத்தி செல்லும். நீங்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கைக் கொண்டு, உங்களுடைய இதயத்தை உங்களுடைய பகுத்தறிவு பின்பற்றும்படி அனுமதிக்காத பட்சத்தில் அது உங்களை எப்பொழுதும் தவறாகவே வழிநடத்தி செல்லும்… ஏனெனில் ஆத்மாவின் உறவு இதயத்தோடுதான் உள்ளது. ஆத்மாவானது தன்னுடைய சொந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது(அதனுடைய சொந்த கண்கள், காதுகள், முதலியன). சூரா பக்கராவில் கூறப்படுவதைபோல், குர்ஆன் முஹம்மது(ஸல்) நபியின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டது… அதனால்தான் எவருடைய ஆத்மாக்கள் செத்துவிட்டனவோ அவர்களை அல்லாஹ் “செவிடர்கள், ஊமைகள்” என்று விளிக்கிறான்.

அது ஒரு வல்லமையான அறிக்கைதான். தர்க்க அறிவு சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லுமென்றால், கடவுளிடம் நம்பிக்கை கொள்வது தர்க்க அறிவுக்கு புறம்பானது என்று அதற்கு பொருள் ஆகாதா? கடவுள் கொடுக்கவில்லை என்றால், மனிதர்களாகிய நமக்கு நம்முடைய மூளையை யார் கொடுத்தது? நம்முடைய மூளையை பயன்படுத்துவது ஏன் சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லும்? கலீலேயோ குறிப்பிட்டது போல், நம்முடைய மூளையை பயன்படுத்துவதை கடவுள் விரும்பவில்லை என்றால், ஏன் அதை அவர் நமக்கு தர வேண்டும்? கடவுளை கண்டடைய தர்க்க அறிவை நாம் பயன்படுத்தக்  கூடாது என்றால், நாம் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?

தங்களுடை பொய்களால் எண்ணற்ற மக்களை ஏமாற்றி அவர்களிடம் உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; பகுத்தறிவு சிந்தனையை முயற்சி செய்யாதீர்கள்; தர்க்க அறிவை பயன்படுத்தாதீர்கள்; வெறுமனே நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுடைய இதயத்தை திறந்து நாங்கள் சொல்கிற எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக நம்புங்கள்; ஏனென்றால் இந்த மூளையற்ற ஏற்பு  உங்களை வழிகாட்டலுக்கு இட்டு செல்லும் என்று கூறிய போலி தீர்க்கதரிசிகளுக்கு(நபிமார்கள்) பஞ்சமே இல்லை. இந்த பரிதாபமான மக்கள் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதற்காக அதுதான் நீங்கள் ஏற்றுக்கொள்கிற இடர்ப்பாடு(risk). கடவுளுடைய செய்தி தர்க்கப்பூர்வமானது  இல்லையென்றால், அது கடவுளுடைய செய்திதான் என்று நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?

நீங்கள் கூறுவதற்கு முரணாக, கடவுள் பகுத்தறிவு உள்ளவராக இருப்பதால், நாம் உளறல்களை நம்புவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். பொய்மையிலிருந்து உண்மையை வேறுபடுத்துவதற்கான அறிவை அவர் நமக்கு வழங்கினார். வாழ்க்கையில் சிறு விஷயங்களில் நம்முடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக நாம் இருக்க வேண்டும் என்றால், கடவுளை கண்டடைய ஏன் நாம் தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்கக்கூடாது?

நீங்கள் சதியை காணவில்லையா? நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாது என்று முஹம்மது ஏன் வலியுறுத்தினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஏனென்றால், அவருடைய உரிமைகோரல் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்பது அவருக்கு தெரியும். தான் ஒரு பொய்யர் என்பது அவருக்கு தெரியும். மக்கள் தங்களுடைய மூளையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உண்மையை கண்டுவிடுவார்கள்; தன்னுடைய பொய்களை ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

வழிகாட்டலை கண்டடைவது என்று வரும்போது, நாம் மடத்தனமாக இருப்பதை கடவுள் விரும்புகிறார் என்று நம்புவது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாதென்றால், எந்த மதம் உண்மையானது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாமே நம்முடைய இதயத்திடம் முறையிட்டு, நம்முடைய மூளையை பயன்படுத்துவதற்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. எந்த ஒன்று சரியான ஒன்று? அதிக தர்க்க அறிவுப்பூர்வமாக  உள்ள ஒன்றை நாம் பின்பற்ற வேண்டுமா அல்லது நம்மை அதிகமாக மிரட்டுகிற ஒன்றையா?

தர்க்க அறிவைக்கொண்டு மட்டுமே நாம் உண்மையை கண்டடைய முடியும். உண்மை தர்க்க அறிவுப்பூர்வமானது. பொய்மையே தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. முஹம்மது கடவுளுடைய உண்மையான தூதர் இல்லை என்பதை காண்பதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இதுதான். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள், கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக அவரைவிட்டு விலகிவிட வேண்டும். ஏனென்றால் அந்த நபர் கடவுளுடைய தீர்க்கதரிசி அல்ல. அவர் ஒரு கபட வேடதாரி. முஹம்மது ஒரு பொய்யர் என்பதை காண்பதற்கு இது போதுமானதாக இல்லையா?

யார் செவிடன், ஊமையன், குருடன்? தன்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக உண்மையை கண்டடைபவனா அல்லது சிந்திக்காமல் நம்பிக்கை கொள்பவனா? இஸ்லாத்தை பொய்யென்று நிரூபிப்பது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?

தர்க்க அறிவினால் நீங்கள் கடவுளிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடுவீர்கள் என்பது உண்மையல்ல. தர்க்க அறிவினால் நீங்கள் முஹம்மதுவிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையைத்தான் இழந்து விடுவீர்கள். முஹம்மதுவுக்கு கடவுளை பற்றிய புரிதலே இருந்ததில்லை. கடவுளை பற்றி அவர் என்னவெல்லாம் சொன்னாரோ, அவை எல்லாமே அறிவீனமானது. தான் விரும்புகிற எதையும் செய்கிற, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத, போற்றி புகழப்பட விரும்புகிற, மூளையற்ற நம்பிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கிற, சுதந்திர சிந்தனையாளர்களை தண்டிக்கிற சதாம்  ஹுசேனை போன்ற, துன்புறுத்தி இன்பம் காணும்(sadist) சர்வாதிகாரியை போன்று கடவுளை அவர் உருவகித்தார். கடவுளை பற்றிய வரையறை அதுவல்ல.

முஹம்மதுவை போன்ற இவ்வளவு குறைவான மதிநுட்பம் உள்ள ஒரு மனிதனால் கடவுளுடைய மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் அவரை மனம் போனபோக்கில் ஆட்சி செய்பவராக அவர் விவரித்தார். கடவுளை பற்றிய முஹம்மதுவின் புரிதல் மடத்தனமானது. அதனால்தான் நீங்கள் உங்களுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சி செய்யும்போது, அவருடைய அல்லாஹ்விடம் நீங்கள் நம்பிக்கையை இழந்து விடுகீர்கள். முஹம்மதுவுடைய கடவுள் தர்க்க அறிவுக்கு புறம்பானவர். மிகவும் அறியாமை மிக்க ஒரு மனிதனுடைய மனதில் உருவகிக்கப்பட்ட உண்மையில் இல்லாத ஒரு பாத்திரம் தானே ஒழிய, அவர் கடவுள் இல்லை.

நான் இஸ்லாத்தை துறந்த பிறகு நான் கடவுளை கண்டடைந்தேன். நான் அதை தர்க்க அறிவினால் கண்டேன். கடவுளை கண்டடைய நான் பகுத்தறிவை விட்டுவிடவேண்டி வரவில்லை. உண்மை தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்க முடியாது. பொய்மைதான் தர்க்க அறிவுக்கு புறம்பானது. கடவுள் என்பது படைப்பின் அடிநாதமாக விளங்கும் ஒரே கோட்பாடு (Single Principle) ஆகும், ஒரு சர்வாதிகாரி அல்ல.

மனிதகுலம் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம், மனிதர்களில் பெரும்பான்மையினர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளர்களில் நம்பிக்கை கொள்வதுதான். நாம் இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிட்டு, தன்னை கண்டடைவதற்காக கடவுள் நமக்கு கொடுத்துள்ள மிகப் பெரிய பரிசை நாம் பயன்படுத்தினால், நாம் எல்லோருமே உண்மையான ஒரே கடவுளை கண்டடைவோம். மனித இனத்திற்கு இடையே உள்ள இந்த பிளவுகள் மறைந்து போகும்.

நீங்கள் ஷைத்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (அவற்றை மின்னஞ்சலில் கூற மாட்டேன்) எனக்கு காண்பிக்கப் படும்வரை, நானும் இஸ்லாத்தையும் முஹம்மது (ஸல்) நபியையும் பற்றி இதே மாதிரியானவைகளை கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகின்ற ஒவ்வொன்றும் உண்மையானதுதான் என்பதை அல்லாஹ் எனக்கு நிரூபித்து விட்டான்(சந்தேகமே இல்லை).

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (signs/ஆயாத்) உங்களுக்கு காண்பிக்கப்பட்டன என்றால், அவைகள் எனக்கு காண்பிக்கப்படவில்லையே. நீங்கள் நம்புவதை நான் நம்ப முடியாது. ஏனெனில் நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்கவில்லை. அத்தாட்சிகள் இல்லாத பட்சத்தில் நான் செய்யக்கூடியதெல்லாம், என்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சிப்பதுதான். நான் அதை செய்யும்போது, முஹம்மது ஒரு கபட வேடதாரி என்பதை நான் பார்க்கிறேன். நான் திரும்பவும் கூறுகிறேன். என்னுடைய புகார் கடவுளை பற்றி அல்ல. நான் நிராகரிப்பது முஹம்மதுவைத்தான். கடவுளோடு முஹம்மதுவுக்கு எந்த தொடர்பாவது இருந்தது என்று நான் நினைக்கவில்லை. அவர் கடவுளை புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு.

பகுத்தறிவுக்கு புறம்பாக நாம் அவரிடம் நம்பிக்கை கொள்வதை கடவுள் விரும்புவாரா? அது இறைநிந்தனை(blasphemy). கடவுள் பகுத்தறிவுக்கு புறம்பானவர் அல்ல. சாத்தான் தான் பகுத்தறிவுக்கு புறம்பானவன். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று முஹம்மது உங்களிடம் கூறுகிறார் என்றால், முஹம்மது சாத்தானிடமிருந்து வந்தவர்தனே ஒழிய அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல என்பதற்கு அதுவே நிரூபணம்.

பரிதாபமான முஸ்லிம்களுக்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது. சாத்தானையையே அன்றி, கடவுளை அவர்கள் வணங்காததால் அவர்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள்; ஒவ்வொருவரோடும், தங்களுக்குள் மற்ற ஒவ்வொருவரோடும் நிலையாக போரில் ஈடுபடுகிறார்கள். ஏன் பூமியில் முஸ்லிம்களே மிகவும் ஏழைகளாகவும் மிகவும் துர்பாக்கியமான நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஏன் அவர்கள் நிலையாக தங்களுக்குள் ஒவ்வொருவரோடும் மற்ற ஒவ்வொருவரோடும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்? அது ஏனென்றால், அவர்கள் சாத்தானை வணங்குகிறார்கள் என்பதுதான்.

கடவுளுடைய அத்தாட்சிகளை பற்றி நீங்கள் பேச முடியாது என்று கூறுகிறீர்கள். அது எனக்கு என்ன நன்மையை செய்கிறது? அந்த அத்தாட்சிகள் யதார்த்தமானது என்றால், நீங்கள் தர்க்க அறிவுப்பூர்வமான வழியில் அவைகளை விளக்க முடியும். நீங்கள் தவறாக வழிநடத்தப் படவில்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்? அந்த அத்தாட்சிகளை பற்றி எனக்கு கூறுங்கள். நீங்கள் முட்டாளாக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நிரூபிப்பேன். நான் என்னுடைய மூளையை பயன்படுத்த வேண்டுமா அல்லது உங்களுடைய மூளையையா? நீங்கள் கண்ட அத்தாட்சிகள் உங்களை திருப்தி படுத்தினால் அது உங்களுக்குத்தான் நல்லது! நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்காதவரைக்கும் நான் நம்ப வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் நம்பிக்கை கொள்வது முட்டாள்தனமாக ஆகிவிடும். பகுத்தறிவுக்கு புறம்பான மற்ற ஏராளமான மதங்களில் ஒன்றில் நம்பிக்கை கொள்ளாமல் இஸ்லாத்தில் நான் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

இஸ்லாம் அழகானதாகவும் அமைதிப்பூர்வமானதாகவும் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மனித இயல்புக்கு இசைவானதாக இருக்கிறது.

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது. நீங்கள் இஸ்லாத்தை அழகானதாக பார்க்கிறீர்கள்.நான் அதை அசிங்கமானதாக பார்க்கிறேன். அது தனிப்பட்ட நம்பிக்கைகளை/கருத்துக்களை  அடிப்படையாகக்  கொண்டது(subjective). நாம் அழகியல் என்பதிற்குள் இறங்காமல் இருப்போமாக! எப்படியாயினும், இஸ்லாம் அமைதிப்பூர்வமானது அல்ல. அந்த உரிமை கோரல் ஒரு தமாஷ். முஸ்லிம்கள் எப்பொழுதும் சண்டையில்தான் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் முஹம்மதுவே 78 அதிரடி கொள்ளை தாக்குதல்களை நடத்தினார். “சண்டையிடுவது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது”(குர்ஆன் 2:216), “நீங்கள் ஜிஹாதில் சண்டையிடவில்லையென்றால், கடுமையான வேதனையைக் கொண்டு அல்லாஹ் உங்களை தண்டிப்பான்”(குர்ஆன் 9:39) என்று குர்ஆன் கூறுகிறது.

இஸ்லாம் அமைதிப்பூர்வமானது என்று கூறுவது கேலிக்குரியது. இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக உள்ளது என்று நீங்கள் கூறும்போது நான் மாறுபட வேண்டியிருக்கிறது. மனித இயல்புக்கு இசைவாக ஏதாவது இருந்தால், அது இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடியும். இஸ்லாம் இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடிவதில்லை. அது போதனை செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அதற்கு அடிபணிய விருப்பமில்லாதவர்களின் மேல் அது திணிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது இயல்பானது அல்ல என்பதற்கு இதுவே நிரூபணம். காதலில் விழுவது இயல்பானது. ஆர்வம் இயல்பானது.  மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடுவது இயல்பானது. இவைகளே திணிப்பு இல்லாமல் இயல்பாக நாம் செய்ய விரும்புவது. ஒரு நம்பிக்கையானது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால் அது இயல்பானது அல்ல.

இஸ்லாம் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்று முன்பு நீங்கள் கூறினீர்கள். இயல்பான ஒன்று எப்படி தர்க்க அறிவுக்கு புறம்பானதாக இருக்க முடியும்? மேலும் அது இயல்பானது எனில், ஜிஹாத் (புனித போர்) நடத்தி வாளினால் மற்றவர்கள் மேல் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும்படி ஏன் முஹம்மது தன்னை பின்பற்றியவர்களுக்கு கட்டளையிட்டார்? ஜிஹாத் என்ற கருத்தாக்கமே இஸ்லாம் மனித இயல்புக்கு எதிரானது என்பதற்கு நிரூபணம் ஆகும். அனுமதிக்கப்பட்டதை ஏவுவது; தடை செய்யப்பட்டதை தடுப்பது(amr bi’l ma’ aroof and nahy anil munkar) என்ற கருத்தே இஸ்லாம் மனித இயல்புக்கு முரணானது என்பதற்கு நிரூபணம் ஆகும்.  இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக இருந்தால், ஏன் அதை மனிதர்களின்மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய தேவை இருக்கிறது?

உங்களுடைய தகவலுக்காக, இந்த உலகில் இன்னும் முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்கள் (காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய விசேஷ பார்வையை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருக்கிறான்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அவுலியாக்களும் (நண்பர்கள்/உதவி செய்பவர்கள்), முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்களும் அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்டது போன்ற  விசேஷ சக்திகள் கொடுக்கப்படுகின்றனர். முஹம்மதுவின் (ஸல்) நபித்துவத்திற்கு அவர்களே வெளிப்படையான ஆதாரமாக உள்ளனர். இவர்களில் ஒருவரிடம் அல்லாஹ் உங்களை கொண்டு வருவானாக. ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்.

முஹம்மதுவை உண்மையாக பின்பற்றுபவர்களான இவர்களில் எவராவது அவருடைய உரிமை கோரலை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால், எனக்கு எழுதும்படி தயவுசெய்து அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.

என்னை மறந்து விடுங்கள். நான் உருப்படாதவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த தளத்தை படிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களை பற்றி அல்லாமல், நீங்கள் என்னை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையை அறிய வேண்டியத் தேவை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? விசேஷ சக்திகள் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம்களை தயவுசெய்து அனுப்பி வையுங்கள். இறுதியாக இஸ்லாத்தின் உண்மையை அவர்கள் நிறுவட்டும்.

முஸ்லிம்களுக்கு விசேஷ சக்திகள் எதுவும் கிடையாது. அது பொதுமக்களின் விருப்பங்களுக்கும் ஒருதலைபட்சதுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் அரசியல் தலைமைத்துவம் (Demagogy). இந்த வெற்று பேச்சுக்களால் எளிதில் ஏமாறக்கூடியவர்களை மயக்கலாம். ஆனால் சுதந்திரமாக சிந்திப்பவர்களை அல்ல. இஸ்லாம் என்பது ஒரு பொய் என்று எண்ணற்ற முஸ்லிம்களை நான் ஏற்றுக்கொள்ளும்படி செய்துள்ளேன். அதிகமான மக்கள் இந்த தளத்தை படிப்பார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை கட்டாயமாக வளர  உள்ளது. காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய உங்களுடைய ஞானம் பெற்ற அவுலியாக்களின் மறுப்பை நான் வெளியிடுவேன் என்ற என்னுடைய வாக்கை நான் உங்களுக்கு தருகிறேன். அதைப்பற்றி அவர்கள் எங்களுக்கு கூறட்டும். அவர்கள் எங்களுக்கு அத்தாட்சிகளை கொடுக்கட்டும். வருகை புரிந்து, நான் எவர்களை தவறாக வழிநடத்தி னேனோ அவர்களை வழிநடத்தும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

பனி இஸ்ரவேலின் தீர்கதரிசிகள் (நபிமார்கள்) முஹம்மது நபி (ஸல்) யை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் நபியுடைய (ஸல்) அவுலியாக்களின் அந்தஸ்து என்ன என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த உம்மத்தினுடைய (சமுதாயம்) அந்தஸ்து என்ன என்பதை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் தவறான கைகளில் நீங்கள் நேரத்தை செலவிட்டிருக்கலாம். உங்களுடைய கருத்துருக்கள் (perceptions) தடுமாற்றமுள்ளதாக ஆகி இருக்கின்றன.

இது மதியீனமானது. முஹம்மதை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்கும்படி இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் பிரார்த்தனை செய்தார்கள் என்று யார் சொன்னது? இந்த முழுவதும் கேலிக்கதக்க உரிமை கோரலுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? ஆதாரமற்ற உரிமை கோரல்களை செய்வது முஸ்லிம்களாகிய உங்களுக்கு வழக்கம்தான். முரண்படுவதை நீங்கள் சகித்துக்கொள்ளமாட்டீர்கள் என்பதால் ஒருவரும் உங்களோடு முரண்படுவதற்கு ஒருபோதும் துணியவில்லை என்பதினால், நீங்கள் இந்த பொய்யான உரிமை கோரல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த பொய்களை உண்மையிலேயே நம்புகிறீர்கள். உண்மையிலிருந்து எதுவுமே தூரமாக இருக்கவில்லை. முஹம்மதுவை பின்பற்றுபவராக இருக்கும்படி ஒருவரும் பிரார்த்தனை செய்ததில்லை. ஏனெனில் முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசியாகவே இருக்கவில்லை. எந்த ஒரு மதத்தினுடைய எந்த புனித நூலிலும் முஹம்மது கூறப்படவில்லை. முஹம்மது பைபிளில் கூறப்பட்டுள்ளாரா? இல்லை, அவர் கூறப்படவில்லை.

பிரயோஜனமற்றது என்று நான் யூகிக்கிற ஒரு நீண்ட கலந்துரையாடலாகவே இது இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஹிதாயத்தை (வழிகாட்டல்) கொடுக்க முடியாது.

அப்படியானால் நீங்கள் எனக்கு ஏன் எழுதினீர்கள்? நரக நெருப்பைக்கொண்டு நீங்கள் என்னை மிரட்டினால் நீங்கள் என்னிடம் எறிகிற எந்த பகுத்தறிவற்ற உரிமை கோரலையும் கண்மூடித்தனமாக நான் நம்பிவிடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு ஆதாரம் தேவை. நீங்கள் ஒன்றையும் தரவில்லை. நான் பகுத்தறிவுக்கு புறம்பான ஒரு கடவுளை நம்ப மாட்டேன்; கண்மூடித்தனமாக பின்பற்றுபவனாக இருக்க மாட்டேன்.

உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அல்லாஹ் விதித்திருந்தால், அவன் உங்களை நரக நெருப்பில் போடுவதென்று முடிவு செய்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அது வரும். நீங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, மனம் வருந்தி, அறிஞர்களிடம் போகாமல் அல்லாஹ்வின் அவுலியா அக்ராமிடம் செல்லும்படி நான் உங்களை சும்மா எச்சரிக்கிறேன். உங்களுடைய தீர்வு அவர்களிடமே உள்ளது. இல்லையென்றால், சீக்கிரமாகவோ அல்லது பிறகோ ஆனால் நிச்சயமாக தண்டனை உங்களிடம் வரும்… என்னை நம்புங்கள்… வெகு சீக்கிரமாகவே, இன்ஷா அல்லாஹ்.

அவ்வளவுதானா? தர்க்க அறிவு ஒருவரை முஹம்மதின் கடவுளிடம் அவநம்பிக்கை கொள்ளும்படி செய்துவிடும் என்று முதலில் கூறுகிறீர்கள். ஏனெனில் அவருடைய கடவுள் தர்க்க அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானவர். பிறகு உங்களிடம் அத்தாட்சிகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவைகளை சொல்ல முடியாது என்று கூறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு ஹிதாயத் இல்லை என்று கூறுகிறீர்கள். முஹம்மது கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் இதுவரை கொடுக்கவில்லை. பிறகு நான் உங்களுடைய பகுத்தறிவுக்கு புறம்பான கடவுளையும் அவருடைய போலி தீர்க்கதரிசியையும் நம்பவில்லையென்றால், நான் நரகத்திற்கு அனுப்பப்படுவேன் என்று மிரட்டல்களை விடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு குழந்தையை பயமுறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் பகுத்தறிவான மனிதர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. இஸ்லாம் உண்மையானது என்று நிரூபிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதுதான். மிரட்டல்கள் மூடர்களுக்கு உரியது. புத்திசாலி மனிதர்களை அடிபணியும்படி  பயமுறுத்த முடியாது. போலி ஆசாமிகளுக்கும் கபட வேடதாரிகளுக்கும் இரையாகாதபடி பயன்படுத்துவதற்காகவே கடவுள் மூளையை நமக்கு கொடுத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் மிரட்டல்களை விடுக்கலாம். எனக்கு தர்க்கப்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். உங்களிடம் ஒன்றுமே இல்லை.

சிந்திப்பதைப் பற்றி பயப்படாதீர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. உங்களுடைய மூளையை பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களுடைய மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தர்க்க அறிவைக்கொண்டு நீங்கள் யதார்த்தமான கடவுளை கண்டடைய முடியும். கபட வேடதாரிகளும் ஏமாற்று பேர்வழிகளும் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய பொய்களுக்கு இரையாகாதீர்கள். தங்களுடைய மூளையை பயன்படுத்தியதற்காக மனிதர்களை கடவுள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார். முஹம்மதுவை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் சாத்தானை பின்பற்றுகிறீர்கள். இந்த மனிதர் என்ன கூறினாரோ, செய்தாரோ அவை சாத்தானியத்தனமாகவே இருந்தன. ஒரு பொய்யரை பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

இஸ்லாம் உண்மையானது என்று உங்களால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது ஒரு பொய் என்று நான் நிரூபித்திருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளை தயவுகூர்ந்து படியுங்கள். நீங்கள் உண்மையை அங்கே காண்பீர்கள். என்னுடைய உரிமை கோரல்களுக்கு ஆதாரமாக  நான் குர்ஆனையும் ஹதீதையும் பயன்படுத்துகிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டால், என்னுடைய புத்தகத்தின் டிஜிட்டல் பிரதியை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். முஹம்மது பொய் உரைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரம் ஏராளமாக உள்ளது. சாத்தானுடைய தீர்க்கதரிசியை பின்பற்றுவதற்காக நீங்கள் வெகுமதி அளிக்கப்பட மாட்டீர்கள். விழித்துக்கொள்வதற்கு இதுவே நேரம். பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் விழித்துக்கொண்டு வருகிறார்கள். கடைசியாக இருந்து விடாதீர்கள்.

 

 

— அலி சினா (Ali Sina)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் (Anand Sagar)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s