முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்

Posted on Updated on

வியாழன், 31 மார்ச் 2011 – கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)

ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து  பார்க்கவேண்டும்.

———————————————————————————————————-

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.

குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : “நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்.”

வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

“மற்றொரு முஹம்மது” – The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.

சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட “முஹம்மதின் மருத்துவ வரலாறு”(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

“முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே” – Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், “அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்” என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் “தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு” ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் – நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த  மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.

————————————————————————————————————

கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். “HP/De Tijid” என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.

மொழி பெயர்ப்பு : ஆனந்த சாகர்

4 thoughts on “முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்

    தஜ்ஜால் said:
    May 16, 2013 at 5:34 pm

    ஆனந்த் சாகர்,

    நல்ல பதிவு,

    கீர்ட் வில்டெர்ஸ், நம்மைப் போன்றவர்களின் எதார்த்த நிலையைப் பிரதிபளிக்கிறார். //நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.// இதுதான் உண்மை என்ற போதிலும், ”லக்கும் தீனுக்கும் வலிய தீன்” என்று த்க்கிய செய்து கொண்டிருக்கின்றனர்.

      Anand Sagar responded:
      May 17, 2013 at 4:21 am

      வாருங்கள் தஜ்ஜால்,

      உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி.

      உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு, என்னுடைய மார்க்கம் எனக்கு(லக்கும் தீனுக்கும் வலிய தீன்) என்று மக்காவில் எந்த வித அதிகாரமும், சொல்லிக்கொள்ளும்படியான ஆதரவும் கிடைக்காமல் பலவீனமான நிலையில் இருந்தபோது அவருடைய சூழ்நிலைக்கு ஏற்றபடி முஹம்மது குர்ஆனில் சொன்னது. ஆனால் இதே முஹம்மது மதீனா சென்று பயங்கரவாதத்தின் மூலம் மதினாவாசிகளை பயமுறுத்தி அதிகாரம் பெற்றவுடன் தன்னை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்று கொள்ளாதவர்களை எல்லாம் படுகொலை செய்தார்; அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்தார்; அவர்கள் வீட்டு பெண்களை கற்பழித்தார்; அவர்களுடைய குழந்தைகளையும் பெண்களையும் அடிமை படுத்தி, அவர்களில் சிலரை அடிமை சந்தையில் விற்று பணம் பார்த்தார், சிலரை தன்னுடைய கைத்தடிகளுக்கு சந்தை பொருளை போல பங்கு பிரித்து கொடுத்து, அந்த பெண்களை பாலுறவு அடிமைகளாக வைத்து கொள்வதை சட்ட பூர்வமாக்கினார்.

      இஸ்லாத்தை பற்றிய உண்மை இப்படி இருக்க, முகம்மதை பின்பற்றும் மூடர் கூட்டம் என்ற மூமின்கள் லக்கும் தீனுக்கும் வலிய தீன் என்பது இஸ்லாமிய கொள்கை என்று கூறி பாமர மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

    Univerbuddy said:
    May 27, 2013 at 4:47 am

    Dear Anand Sagar, thanks for this new post. Welcome to my new blog: planetwumma.blogspot.com. (I hope you have seen my other 3 blogs already)
    Univerbuddy.

      Anand Sagar responded:
      May 30, 2013 at 7:32 am

      Welcome Univerbuddy,

      Thanks for visiting this blog. I have visited your blog and will regularly visit it and post my comments.

      Anand Sagar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s