மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 1

Posted on

மௌலான அஜ்மல் காதிரி தேவ்பந்த் பிரிவின் மூத்த மார்க்க அறிஞராகவும் ஜாமியத் -இ -இஸ்லாமின் (இஸ்லாமிய அறிஞர்களின் கழகம்) தலைவராகவும் இருக்கிறார். அவரை பின்பற்றுபவர்களால் அவர் பீர் (pir / புனிதர்) என்று மதிக்கப்படுபவராகவும் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குமிக்க மத குருமார்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஷரியத் மசோதாவை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் (law makers) கொல்லப்பட தகுந்தவர்கள் என்று 1999 ல் மௌலானா காதிரி பத்வா (fatwa) வழங்கினார்.

அவர் மேலும் கூறியிருக்கிறார் : “நம்முடைய மதரஸாக்களில் நாம் குர்ஆனிய  ஜிஹாதை போதிக்கிறோம். அல்லாஹ்வை தவிர வேறு எவருடைய அல்லது வேறு எந்த சக்தியின் மேலாதிக்கத்தையும் அனுமதிப்பதை இது மறுக்கிறது. முஸ்லிம் மார்க்கமே மேலான மார்க்கம் என்றும் இஸ்லாமிய கொள்கையே மிக சிறந்தது என்றும் மீதியான உலகம் செய்வது விரும்புகிற அளவுக்கு இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

இது மிகவும் சுவாரசியமான விவாதமாக மாறியது. மற்றவர்கள் குப்ர்(kufr/இறை நிந்தனை), ஷிர்க்(இணைவைப்பு), நிபாக்(nifaq/நயவஞ்சகம்), ஹசத்(hasad/பொறாமை) புரிவதாக மௌலானா காத்ரி குற்றம் சுமத்தினார். உண்மையிலேயே இந்த பாவங்களை செய்யும் குற்றவாளிகள் முஸ்லிம்கள்தான் என்றும் இஸ்லாமே கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய இறைநிந்தனை என்றும் நான் நிரூபித்தேன்.

 

17/11/2007

மௌலான அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு முதல் மின்னஞ்சல் : 

திரு அலி,

ஷைத்தானுடைய உலகில் நீங்கள் பெரும் பெயரை சம்பாதித்துள்ளீர்கள்.

அன்பார்ந்த மௌலானா நீங்கள் சரி என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் மத்தியில் நான் பிரபலமாகிக்கொண்டு வருகிறேன். 

நான் ஏன் இதை சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று எனக்கு புரிகிறது. உங்களை போன்றே ஏதோ ஒன்றாக….. ஒரு சந்தேகவாதியாக (an agnostic) நான் இருப்தேன்….. மேற்கத்திய தத்துவம் முதலிய இஸ்லாத்திற்கு எதிரான இவை எல்லாவற்றையும் நான் படித்தேன்…. ஆனால் அல்ஹம்துலில்லாஹ் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான்.   

அந்த நேர்வழியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள சிரத்தை எடுத்து கொள்வீர்களா? நீங்கள் கண்டதை கேட்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். நாங்கள் தவறவிட்டுவிட்ட ஏதாவது நல்லது இஸ்லாத்தில் ஒருவேளை இருக்கலாம்.

உங்களுக்கு எந்த சான்றையும் நான் தரமுடியாது. ஆனால் நம்மால் புரிந்து கொள்வதற்கும் காண்பதற்கும் அப்பாற்பட்ட மற்ற சக்திகள் இருக்கின்றன.

அந்த வாத அடிப்படையோடு(premise) எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இருந்தபோதிலும், எந்த வழிகளில் நமக்கு அப்பாற்பட்ட அந்த அமானுஷ்ய சக்திகள் முஹம்மதுவுடைய உரிமைகோரலை உண்மை படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? முஹம்மதையும் அவருடைய உரிமைகோரலை பற்றியும் தவிர, அந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி நாம் வாதம் புரியவில்லை. நான் கண்டவைகளின்படி, முஹம்மது உலகாதாய அதிகாரத்தை பெறுவதற்கு எளிதில்  ஏமாரக்கூடியவர்களை முட்டாளாக்கி பொய்யுரைத்த ஒரு கபட வேடதாரி. மற்ற எந்த தனிநபர் வழபாட்டு குழு தலைவரைவிட (cult leader) முஹம்மது எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல. என்னுடைய புகார் கடவுளையோ அல்லது அமானுஷ்ய சக்திகளை பற்றியோ அல்ல. என்னுடைய புகார் முஹம்மதையும் அவருடைய போலியான உரிமை கோரலை பற்றியும்தான். 

அல்லாஹ் எனக்கு   காட்டிய வழியை உங்களுக்கு காட்டுவானா என்று எனக்கு தெரியாது. ஆனால் நீண்ட காலமாக உங்களை பின்தொடருகிற தீய சக்திகளின் கைகளில் ஒரு கருவியாக  நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் என்ற  ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயம், நிச்சயம். திரும்பி  வருவது என்பது இல்லாமல் போகலாம் என்கிற அளவுக்கு நீங்கள் சென்றுவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஷைத்தானால் பாதிக்கப்பட்டவராக இருகிறீர்கள். அதற்குமேல் ஒன்றும் இல்லை.

இது வெறும் ஆதாரமற்ற உரிமை கோரல். அல்லாஹ் உங்களுக்கு காட்டியது தர்க்க அறிவுப்பூர்வமானது என்றால், நீங்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களையும் நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களாக ஆக்கலாமே. கடவுள் என்பவர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளாக இருக்க முடியாது என்பதால், அவருடைய வழிகாட்டலும் தர்க்க அறிவுப்பூர்வமானதாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் ,எந்த கபட வேடதாரியும் கடவுளுடைய தூதர் என்று உரிமை கோரி மக்களை முட்டாளாக்க முடியும். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி (நபி) என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று தர்க்க அறிவுப்பூர்வமான முறையில் எங்களுக்கு நீங்கள் கூறமுடியுமா?

உங்களுடைய அறிவை பற்றி நீங்கள் அகந்தையுடன் இருக்கிறீர்கள். ஏனெனில் இஸ்லாத்தை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உண்மையிலேயே,  இஸ்லாத்தை பற்றிய அறிவில் நீங்கள் குறைபாடு உடையவர். நீங்கள் மனந்திருந்தாத பட்சத்தில், இங்கேயும் மறுமையிலும் வேதனையை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். அல்லாஹ் ஏற்றுக்கொண்டால், காத்திருந்து பாருங்கள். அது உங்களிடம் வரும்போது தயவு கூர்ந்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். 

கடவுள், உண்மையிலேயே இருப்பாரானால், அநியாயக்காரராக இருக்க முடியாது. அநியாயக்கார கடவுள் சாத்தானே தவிர, கடவுள் கிடையாது.   நீதிமிக்க கடவுள் ஒருவரை அவருக்கு எல்லா ஆதாரத்தையும் அத்தாட்சியையும் கொடுக்காம லேயே   நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக தண்டிக்க மாட்டார். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை. சாத்தானை பின்பற்றியதற்காக கடவுள் என்னை தண்டிக்கலாம் என்று நான் அஞ்சுவதால் முகம்மதை பின்பற்றுவதை நான் மறுக்கிறேன். நான் பார்த்தவரை, முஹம்மதின் செயல்களும் வார்த்தைகளும் மிகவும் சாத்தானியத்தனமாகவே இருந்தன. நான் போலி தீர்க்கதரிசியை பின்பற்றி அதற்காக நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை. அதனால்தான் நான் இஸ்லாத்தை துறந்து விட்டேன். எச்சரிக்கப்படவும் முஹம்மதின் உரிமை கோரலை ஆராய்ந்து பார்க்கும்படியும் குர்ஆனை படித்து அவர் உண்மையான தீர்க்கதரிசி(நபி) இல்லை என்பதை தாங்களே காணும்படியும் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். பொய்யான தீர்க்கதரிசியை நம்பி, நம்பிக்கை கொள்ளாதவர்களை வெறுப்பது, கொலை செய்வது போன்ற அவருடைய தீய ஏவல்களை செய்வதின் மூலம், அவர்கள் நரகத்திற்கு செல்லலாம்.

இஸ்லாத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று இப்பொழுது கூறுகிறீர்கள். எல்லாம் தெரியும் என்று நான் ஒருபோதும் உரிமை பாராட்டியது இல்லை. நான் ஒரு மனிதன், தவறு செய்யகூடியவன். நான் தவறாக இருப்பது சாத்தியமே. அதனால் தான் எவரும் என்னுடைய தவறுகளை சுட்டி காட்டும்படி அழைப்பு விடுக்கிறேன். மனம் திருந்தி இந்த தளத்தை (faithfreedom.org) மூடிவிடுவது மட்டுமல்லாமல், நான் தவறென்று நிரூபிப்பவருக்கு என்னுடைய ஆன்மாவை ரட்சித்து நேரான வழியை காண எனக்கு உதவியதற்கு சன்மானமாக 50,000 டாலர்களை வழங்குவதாகவும் நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

பலர் முயற்சி செய்தார்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக தோற்றுபோய் அவர்கள் தவறில் இருப்பதை நிரூபித்தனர். முஸ்லிம் அறிஞர்களோடு நான் செய்த ஒவ்வொரு விவாதத்திலும் நானே வெற்றி பெற்றேன். இப்பொழுது, இஸ்லாத்தில் எனக்கு முறையான பயிற்சி இல்லை என்பதும் என்னுடைய இஸ்லாமிய, அரபி மொழி அறிவு அவர்களின் அறிவுக்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. இருந்தாலும் மாற்றமில்லாமல் நானே வெற்றி பெறுகிறேன். எல்லா நேரமும் அவர்களே தோல்வி அடைகின்றனர். நான் புத்திசாலி, எனக்கு அதிக அறிவு உள்ளது என்பதினால் நான் வெற்றி பெறாமல், இஸ்லாத்தை பற்றிய உண்மையை நான் புரிந்து கொள்கிறேன், அதே வேளையில் அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதினால் தான் நான் வெற்றி பெறுகிறேன் என்பதையே இது நிரூபிக்கிறது. அறிவு என்பதற்கு புரிந்து கொள்ளுதல் என்று பொருளல்ல. ஒருவர் அதிக அறிவு உடையவராக இருந்து மிக சிறிதளவே புரிந்து கொள்பவராக இருக்க கூடும். இந்த படித்த முட்டாள்கள் புத்தகங்களை சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு உங்களுடைய ஆதாரங்களை எழுதி, எங்களுடைய மன்றத்தில் (forum) அவைகளை பதிவிட்டு உண்மையை ஒவ்வொருவரும் படித்து அறிந்துகொள்ள செய்வதற்கு நீங்கள் மிக அதிகமாக வரவேற்கப்படுகிறீர்கள். அதைவிட எது சிறந்ததாக இருக்க முடியும்? இஸ்லாத்தை உயர்த்தி, முன்னாள் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் இஸ்லாம் கடவுளுடைய உண்மையான மார்க்கம் என்பதை அறிந்து கொள்ள உதவி செய்வதற்கு நான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அலி சினா 

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

One thought on “மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 1

    தமிழன் said:
    July 15, 2013 at 10:41 am

    //அன்பார்ந்த மௌலானா நீங்கள் சரி என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் மத்தியில் நான் பிரபலமாகிக்கொண்டு வருகிறேன். // lol, இதை ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். அருமையாக இருக்கும். தொடரட்டும் உங்களின் பணி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s